வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கில், அமைச்சர் பதவி பறிபோகும் நிலையில் உள்ள அமைச்சர் செல்லப்பாண்டியன், கார் மோதி ராமர் என்ற இளைஞர் பலியானார்.
நெல்லை மாவட்டம் கடையம் அருகே அரசு விழாவில் கலந்து கொள்ள அமைச்சர் செல்லப்பாண்டியன் 15 வாகங்களுடன் செல்கிறார். அமைச்சர் செல்லப்பாண்டியன் பயணம் செய்த கார்(TN 69 AF 5555) அதிவேகமாக வாகைக்குளம் அருகே சென்றுக்கொண்டிருந்தது.
அமைச்சர் செல்லப்பாண்டியன், காரில் செல்போன் மூலம் திமுக மாவட்டச் செயலாளர் தூத்துக்குடி பெரியசாமியிடம், நில விவகாரம் தொடர்பாக பஞ்சாய்த்து பேசிக்கொண்டு இருந்தார்.
அமைச்சர் கார், டி.வி.எஸ் 50 இரு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தவர் மீது மோதி, சுமார் 100 அடி இழுத்துக்கொண்டு செல்கிறது. அமைச்சர் செல்லப்பாண்டியன் டிரைவரிடம் காரை நிறுத்தாதே, நான் பார்த்துக்கொள்கிறேன்.. வேகமாக போ என்று டிரைவரிடம் கத்த, டிரைவர் வேகமாக ஒட்டி சென்றார். அமைச்சருக்கு பாதுகாப்புக்கு வந்த போலீசார், அமைச்சர் காரில் அடிப்பட்டு சின்னபின்னமாகி சாலையில் கிடக்கும் இளைஞரை தொட்டு பார்க்கிறார்கள். அவன் உயிர் போயிருந்தது. செல்போனில் வந்த அமைச்சர் செல்லப்பாண்டியன் உயிர் போய்விட்டது என்று சொல்லாமல், 108ல் ஏற்றி தூத்துக்குடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் உத்தரவிட்டார். செல்போனில், நமக்கு நேரம் சரியில்லை, ஒரு பய நம்ம காரில் சிக்கி, செத்து போய்விட்டான் என்ற அலட்சியமாக கூறினார்..
நிஷா சலூன் கடையில் பணியாற்றும் ராமர், மதியம் சாப்பிட்டுவிட்டு கடையில் வேலை செய்யும் மற்றொரு நபருக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு முடிவைத்தானேந்தலிருந்து, வாகைக்குளம் வரும் போதுதான், டிவிஎஸ்50 வாகனத்தில் அதிவேகமாக வந்த அமைச்சர் கார் மோதி, பலியானார்.
ஆனால் ஆழ்வார்திருநகரி யூனியன் சேர்மன் விஜயகுமார் கார் மொதி இறந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்தார்கள்..
அமைச்சர் செல்லப்பாண்டியன் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், அவரை கைது செய்ய வேண்டும் என்று ராமர் உறவினர்கள், அந்த பகுதி மக்கள் சாலை மறியல் செய்து வருகிறார்கள். பதற்றம் தொடர்ந்து நீடிக்கிறது. தூத்துக்குடி எஸ்.பி ராஜேந்திரன் ஐ.பி.எஸ், எப்படியாவது அமைச்சரை காப்பாற்ற வேண்டும், போலீசார் பத்திரிகைகளுக்கு பேட்டித்தரக்கூடாது, என்று உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர் செல்லப்பாண்டியன் பயணம் செய்த காரிலிருந்து நான்காவது கார் மோதியதாக வழக்கு பதிவு செய்துள்ளது வேதனையாக இருக்கிறது.
அமைச்சர் கார் மோதி, இளைஞர் ராமர் அடிப்பட்டு துடிக்கிறார், அமைச்சர் காரை நிறுத்தாமல் சென்றது, பொறுப்பில்லாத அமைச்சர் என்பது உறுதியாகிறது..
உடனடியாக அமைச்சர் செல்லப்பாண்டியன் கார்(TN 69 AF 5555) டிரைவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். அதிவேகமாக ஒட்டும்படி கூறி அமைச்சர் செல்லப்பாண்டியன் மீது கார் விபத்துக்கு தூண்டுதலாக இருந்தார் என்று வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அதிமுக வாக்கு அளித்த மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்கள்..
அமைச்சர் செல்லப்பாண்டியன் அலட்சியமாக புறம்போக்கு பயபுள்ள நம்ம காரில் சிக்கி செத்து போய்விட்டான் என்ன செய்வது, பணம் கொடுத்துவிடலாம், பையனின் அப்பாவை மிரட்டுங்கள் என்று எஸ்.பியிடம் கூறியிருக்கிறேன் என்று செல்போனில் யாரிடமோ பேசிக்கொண்டு இருந்தார்..
ஏழைகள் உயிர் என்றால் கேவலமாக இருக்கிறது…ஏழைகள் வாக்கு மட்டும் இவர்களுக்கு இனிக்கிறது..
மக்கள்செய்திமையம் 13.4.13 மாலை 5மணி thanks, makkalseythimaiyam
0 comments:
Post a Comment