கல்பாக்கத்தில் அடிப்படை தேவைகளுக்காக போராடிய அப்பாவி மக்களை கைது செய்து சிறையில் அடைத்ததை கண்டித்தும் அவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு வழங்க வலியுறுத்தியும் காஞ்சி மாவட்ட எஸ்.டி,பி.ஐ கட்சியின் சார்பாக இன்று(02/04/2013) மாலை 4.00மணி அளவில் காஞ்சி மாவட்டம் புதுப்பட்டினம் பேருந்து நிலயம் அருகில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் காஞ்சி மாவட்ட தலைவர் பிலால் அவர்கள் தலைமை வகித்தார், மாநில செயலாளர் அமீர் ஹம்ஸா அவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு தனது கண்டன உரை நிகழ்த்தினார். கேம்பஸ் ப்ரண்ட் ஆஃப் இந்தியா மாணவ அமைப்பின் தமிழக பொது செயலாளர் ஷஹீத், மத்திய சென்னை மாவட்ட தலைவர் முஹம்மத் நாஜிம் , திருவள்ளூர் மாவட்ட தலைவர் சலீம், மற்றும் காஞ்சி மாவட்ட தலைவர் ஆகியோர் தங்கள் கண்டன உரையை பதிவு செய்தனர்.
ஆர்பாட்டத்தில் மத்திய சென்னை மாவட்ட தலைவர் முஹம்மத் நாஜிம் அவர்கள் தங்கள் உரையில் காவல்துறைக்கு கண்டனத்தையும், இது ஜனநாயக நாடா இல்லை சர்வாதிகார நாடா என்றும் ,இன்னொரு கூடங்குளத்தை கல்பாக்கத்தில் உருவாக்கி விடாதீர்கள் தேவைப்பட்டால் நாளையே டெல்லி யில் இது விஷயமாக ஒரு ஆர்பாட்டத்தை எஸ்.டி.பி.ஐ கட்சி யினால் நடத்த முடியும்’…இது போன்ற அடக்குமுறைக்கு ஒரு போதும் எஸ்.ட.பி.ஐ கட்சி அனுமதிக்காது..அடக்குமுறைக்கு எதிராக போராடும் களத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி என்ன உயிர் தியாகமும் செய்ய தயங்காது என்றும் தன அனல்பறக்கும் கண்டனங்களை பதிவு செய்தார், இதில் ஏராளமான பொதுமக்களும் எஸ்.டி.பி.ஐ கட்சி செயல்வீரர்களும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment