Tuesday, April 30, 2013

இஷ்ரத் ஜஹான்:விசாரணைக்கு குஜராத் அரசு ஒத்துழைக்கவில்லை – சி.பி.ஐ புகார்!

                        30 Apr 2013 Gujarat shielding cop linked to Ishrat Jehan case, claims CBI
 
     புதுடெல்லி:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் முதல்வர் மோடியை கொலைச் செய்ய சதித்திட்டம் தீட்டினார்கள் என்று கூறி மும்பை கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு அப்பாவிகளை அநியாயமாக போலி என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற வழக்கில் விசாரணைக்கு குஜராத் அரசு ஒத்துழைக்கவில்லை என்று சி.பி.ஐ புகார் கூறியுள்ளது.
 
     குஜராத் கூடுதல் டி..ஜி.பிக்கும், சம்பவம் நிகழ்ந்தபோது அஹ்மதாபாத் இணை கமிஷனராக பதவி வகித்த பி.சி.பாண்டேவுக்கும் இஷ்ரத் உள்ளிட்ட நான்கு பேரின் கொலையில் சதித்திட்டம் தீட்டியதில் பங்குண்டு என்று சி.பி.ஐ வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால்,பாண்டேயின் விளக்கம் இதுவரை கிடைக்கவில்லை. பாண்டே மீது கைது வாரண்ட் பிறப்பிக்க நீதிமன்றத்தை அணுகப்போவதாக சி.பி.ஐ தெரிவித்துள்ளது.
 
     1980 ஆம் ஆண்டு பாட்சில் ஐ.பி.எஸ் அதிகாரியான பாண்டேவை சி.பி.ஐ ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தியதாக சில தினங்களுக்கு முன் செய்தி வெளியானது. ஆனால், இச்செய்தியை மறுத்துள்ளது சி.பி.ஐ.இஷ்ரத் உள்ளிட்ட நான்குபேரின் போலி என்கவுண்டர் படுகொலைகளில் பங்குண்டு என்று குற்றச்சாட்டு எழுந்ததையொட்டி அஹ்மதாபாத் போலீஸ் கமிஷனராக பதவி வகித்த கே.ஆர்.கவுசிக் மற்றும் பாண்டே ஆகியோரின் பங்கினை குறித்து சி.பி.ஐ விசாரித்தது.
 
     குஜராத்தில் நடந்த பல்வேறு போலி என்கவுண்டர் படுகொலை வழக்குகளில் சிக்கி பல ஐ.பி.எஸ் அதிகாரிகளும் குஜராத் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 
     சாதிக் ஜமால் என்ற இளைஞரை போலி என்கவுண்டரில் கொலைச் செய்த வழக்கில் ஐ.பி.எஸ் அதிகாரியான கிரிஷ் சிங்கால், முன்னாள் துணை போலீஸ் சூப்பிரண்ட் தருண் பரோத், முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் கே.ஜி.பர்மர் ஆகியோரை சி.பி.ஐ ஏற்கனவே கைதுச் செய்திருந்தது.
 
     சொஹ்ரபுத்தீன் ஷேக், அவரது மனைவி, சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் கொலை வழக்கில் சாட்சியான துளசிராம் பிரஜாபதி ஆகியோரி போலி என்கவுண்டரில் சுட்டுக்கொலைச் செய்த வழக்கில் ஐ.பி.எஸ் அதிகாரிகளான டி.ஜி.வன்ஸாரா, ராஜ்குமார் பாண்டியன், என்.கே.அமீன் ஆகியோர் கைதுச்செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு சிறைகளில் சிறந்த வசதிகள் செய்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

0 comments:

Post a Comment