25 Apr 2013
புதுடெல்லி:இந்திய தலைநகரான புதுடெல்லியில் 60,573 பேருக்கு துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான லைசன்ஸ் இருப்பதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து மத்திய உள்துறை இணையமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் செவ்வாய்க்கிழமை அளித்த பதில் விவரம்: இந்திய ஆயுத சட்டப் பிரிவுகளின்படி தலைநகர் டெல்லியில் மட்டும் 60,573 பேர் துப்பாக்கி உரிமம் வைத்திருக்கிறார்கள் என தகவல் வெளியிடப்பட்டது. உரிமம் வைத்திருப்பவர்கள் தங்களது துப்பாக்கிகளை முறைகேடாகப் பயன்படுத்துவதைத் தடுக்க முறையான பயிற்சி ஏதும் அளிக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு, “”அப்படி குறிப்பிட்ட திட்டம் ஏதும் இல்லை.
இருப்பினும் உரிமம் வழங்கும்போதே துப்பாக்கிகளை பாதுகாப்பாக பயன்படுத்த டெல்லி போலீசார் சில அடிப்படை பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் அளிப்பது வழக்கத்தில் உள்ளது” என பதிலளித்தார் முல்லப்பள்ளி ராமச்சந்திரன்.
0 comments:
Post a Comment