Monday, April 29, 2013

சனி, ஏப்ரல் 27, 2013 Adirai தமீம் அன்சாரி மீது போடப்பட்ட தே.பா., சட்டம் ரத்து!


     தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த காய்கறி மொத்த வியாபாரியான தமீம் அன்சாரி மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
     தஞ்சை அதிராம்பட்டின‌த்தை சே‌ர்‌ந்த காய்கறி மொத்த வியாபாரியான தமீம் அன்சாரி, இந்திய ராணுவ முகாம்கள், தளங்கள் பற்றி ரகசியமாக தகவல்களை சேகரித்து இலங்கை பா‌கி‌ஸ்தா‌ன் தூதரக அ‌திகா‌ரிக்கு அளித்ததாக தமிழக ‘க்யூ ப்ராஞ்ச்’ போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
     ஊட்டியில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி மையம் மற்றும் காரைக்கால், நாகப்பட்டினத்தில் உள்ள துறைமுகங்கள், கடற்கரையோர பாதுகாப்பு ஏற்பாடுகளை போட்டோ மற்றும் வீடியோ எடுத்தும், வரைபடங்கள் தயாரித்தும் அவற்றை சி.டி. ஆக தயாரித்து இலங்கை வழியாக பாகிஸ்தானுக்கு கொடுக்க திட்டமிட்டிருந்தாக கூறி திருச்சி விமானநிலையத்துக்கு போகும் வழியில் கைது செய்ததாக காவல்துறை அறிவித்தது.
      மேலும் அன்சாரி இந்திய நாட்டுக்கு எதிராக சதி செய்து ராணுவ ரகசியங்களை வெளிநாட்டு உளவாளிகளுக்கு கொடுத்து நாட்டின் ராணுவத் தளங்களை அழிக்க முயற்சி செய்ததாக கூறி அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.
    இந்நிலையில் இதுகுறித்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடந்துவந்தது. நேற்று இவ்வழக்கு விசாரணையின் போது வழக்கின் நம்பகத் தன்மையின் அடிப்படையில் தமீம் அன்சாரி மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்வதாக நீதிபதிகள் சத்தியநாராயணா, செல்வம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது. இதன்மூலம் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஜாமீன் மறுக்கப்பட்டு வந்த அன்சாரிக்கு விரைவில் ஜாமீன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment