Sunday, April 28, 2013

நாட்டை கட்டியமைக்கும் சிற்பிகள் யார்?



     ஏப்ரல் 28: கார்பரேட் முதலாளி பாபா ராம்தேவ் நடத்தும் பதஞ்சலி யோகபீடத்தில் நிகழ்ச்சியை ஒன்றை தொடங்கி வைத்துப் பேசினார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.
     மோடியின் அருள் வாக்கு 1: 6 கோடி குஜராத்தியர்கள் குஜராத் மாநிலத்தை நம் நாட்டில் ஒரு வெற்றிகரமான மாநிலமாக மாற்றியதைப் பார்த்து விட்டேன்.
     பதில் 1: குஜராத் மக்கள் குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் படும் அவஸ்தையும், தினமும் நிகழும் விவசாயிகளின் தற்கொலையும், சிறுபான்மை மக்களுக்கு எதிரான ஒடுக்கு முறையும் இவைகள்தான் இந்த கொடுங்கோல் ஆட்சியாளரின் சாதனைகள். இவர் செய்த அவலங்களை மக்கள் தலையில் போடுவதை பாருங்கள்.
     மோடியின் அருள் வாக்கு 2: அதனால் 125 கோடி இந்தியர்களும் தங்கள் நாட்டை உலகில் ஒரு வெற்றிகரமான நாடாக மாற்றுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
     பதில் 2: இவர் குஜராத்தில் செய்த அவலங்கள் போதாது என்று மொத்த இந்தியாவையும் சுடுகாடாக்க திட்டமிடுகிறார் போலும். குஜராத்தில் சிறுபான்மை முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக மத வெறியும், தலித் மற்றும் ஒடுக்கபட்ட மக்களுக்கு எதிராக ஜாதிய வெறியும் உரமிட்டு வளர்க்கப்படுகிறது. மீண்டும் நாடு வர்ணாசிரம கொள்கையை நோக்கி நகர்த்தப்படுகிறது.
     மோடியின் அருள் வாக்கு 3: இந்த நாட்டைக் கட்டமைத்துப் பாதுகாப்பதில் சந்நியாசிகள், சாதுக்களின் பங்கு மிக அதிகம். நாம் குறைந்தது அவர்களைச் சந்தித்து, அவர்களின் பணியை அங்கீகரிக்க வேண்டும்.
பதில் 2: இவர்கள் நாட்டை கட்டியமைப்பதற்கு இவர்கள் என்ன செய்தார்கள் என்று மோடி ஒரு வெள்ளை அறிக்கை சமர்பிப்பாரா? விஞ்சானிகளையும், பொருளாதார மேதைகளையும் வீட்டுக்கு அனுப்பி விட்டு நாட்டை கட்டியமைக்கும் பணிக்கு இவர்களை நியமிக்கலாம்.
மோடியின் அருள் வாக்கு 3: பாபா ராம்தேவுக்கு அரசியல் ரீதியான கருத்தோட்டம் இருக்கும் என்று கூறப்படுவதை நான் நம்பவில்லை. அவர் மக்களுக்கான ஆரோக்கியத்துக்கு வழிகாட்டுகிறார். அவருடைய இந்தப் பயணத்தில் நிச்சயமாக நாட்டின் ஆரோக்கியமும் அடங்கியிருக்கிறது.
பதில் 3: இதைமாதிரி பெரிய ஜோக் எதுவும் இருக்க முடியாது. பாபா ராம்தேவ் மக்களின் ஆரோக்கியத்திற்கு வழி காட்டுகிறாராம். அப்படி என்றால் அதை இலவசமாவல்லவா காட்ட வேண்டும். வெறும் சைக்களில் வலம் வந்த இந்த சாமியார் இன்று வெளிநாட்டு காரிலும், சொந்த ஹெலி ஹாப்டர் விமானத்திலும் வலம் வருவதின் மர்மம் என்ன? வெளிநாட்டில் சொந்தமாக ஒருதீவும், உல்லாசா பங்களாவும் இருப்பதேன்? இதுதான் சந்நியாசத்திற்கு அளவுகோலா?
முன்னர் காடுகளில் சிந்த்தர்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் உண்மையிலேயே மக்களுக்கு தொண்டு புரிந்தார்கள். மருத்துவத்தை இலவசமா செய்தார்கள். பாபா ராம்தேவ், பிரமானந்தா, நித்தியானந்தா, ஸ்ரீ ரவிசங்கர், இவர்கள் எல்லாம் கார்பரேட் கொள்ளையர்களே அன்றி மக்களுக்கு சேவை புரியும் மகான்கள் இல்லை.
*ஒரு நாட்டை கட்டியமைக்கும் சிற்பிகள் உழைக்கும் வர்க்கமே*
*மலர் விழி*  thanks, sinthikkavum

0 comments:

Post a Comment