28 Apr 2013
கண்ணூர்:கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள நாராத் என்ற பகுதியில் முஸ்லிம் இளைஞர்கள் கைதுச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை தேவை என்று இந்திய தேசிய லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் சுலைமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட பேராசிரியர் சுலைமான் கூறியது:போலீஸ் கூறும் தகவல்கள் வடிகட்டிய பொய்களாகும். அது தொடர்பான செய்திகளும் சரியல்ல. ஆகையால் ஒரு அமர்வு நீதிபதியைக் கொண்டு நாராத் சம்பவம் குறித்து விசாரணை நடத்தவேண்டும்.அதன் மூலமே உண்மைகள் வெளியாகும். இந்தியாவில் போலீஸ் கூறுவது எப்பொழுதுமே உண்மைக்கு மாற்றமானதாகும்.இதற்கான ஆதாரம் தான் சம்ஜோதா, மாலேகான், மக்கா மஸ்ஜித் உள்ளிட்ட குண்டுவெடிப்புகளுக்கு முஸ்லிம் அமைப்புகளின் மீது பழியை சுமத்தி விட்டு பின்னர் விசாரணையில் சங்க்பரிவார அமைப்புகள் பின்னணியில் இருப்பது தெரிய வந்த சம்பவங்களாகும்.
முஸ்லிம் அமைப்புகள் மீது இந்தியாவில் உளவுத்துறை வடிகட்டிய பொய்களை பரப்பி வருகிறது. இந்தியாவில்தீவிரவாத குற்றம் சுமத்தி 1400க்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்களை சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தில்(யு.ஏ.பி.ஏ) ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சிறைகளில் அடைத்துள்ளது. இச்சட்டம் முற்றிலும் அரசியல்சாசனத்திற்கு எதிரானது. போலீஸ் மற்றும் அரசின் தவறுகளால் பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு நிரபராதிகள் என்று நீதிமன்றம் விடுவித்தால்அவர்களுக்கு இழப்பீடு வழங்க தேவையான ஏற்பாடு வேண்டும்.
மக்களவை தேர்தல் வந்தால் 3-வது அணிக்கு வாய்ப்புள்ளது. பா.ஜ.கவுக்கும், காங்கிரசுக்கும் எவ்வித வாய்ப்பும் இல்லை. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமெரிக்காவை தாஜாச் செய்யும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துகிறது.
செய்தியாளர்கள் சந்திப்பில் தேசிய லீக்கின் தமிழக தலைவர் நாகூர் ராஜா, அகில இந்திய செயலாளர் அஹ்மத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment