25 Apr 2013
சென்னை:பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் நடுநிலையான விசாரணை தேவை என்றும், உண்மையான குற்றவாளிகள் கைதுச் செய்யப்படவேண்டும் என்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி பெங்களூரில் பா.ஜ.க அலுவலகம் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணை முஸ்லிம்களை குறிவைத்து நடத்தப்பட்டு, சில முஸ்லிம்கள் கைதுச் செய்யப்பட்ட சூழலில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக மாநில பொதுச் செயலாளர் அ.காலித் முஹம்மது அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பது:கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி பெங்களூரில் குண்டுவெடித்து, 17க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.இது மனித குலத்திற்கு எதிரான குற்றம்.வன்மையாக கண்டிக்கத்தக்கது.குண்டுவெடிப்பு சம்பந்தப்பட்ட வழக்கின் விசாரணை ஒரு சார்பாக இல்லாமல் நடுநிலையோடு நடக்கவேண்டும்.இது வரை நாட்டில் நடைபெற்ற அனேக குண்டுவெடிப்புளுக்கு பின்னால் சங்க்பரிவார இயக்கங்களே காரணம் என்று ஊர்ஜிதம் செய்யப்பட்ட உண்மை.இதை இந்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே அவர்கள் காவி பயங்கரவாதம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் கைதுச் செய்யப்பட்ட 26 முஸ்லிம்கள் பின்பு நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டனர்.ஆந்திர அரசு அவர்களுக்கு நிவாரணம் கொடுக்க முன்வந்தது.ஆனால், அன்று நடந்த ஒரு சார்பு விசாரணையில் நிரபராதிகள் தண்டிக்கப்பட்டனர்.
அதைப்போல பெங்களூர் குண்டுவெடிப்பு தொடர்பாக நடைபெற்றுவரும் விசாரணை அமைந்து விடக் கூடாது.குண்டுவெடிப்பை முஸ்லிம்கள்தான் செய்து இருப்பார்கள் என்ற ரீதியிலேயே விசாரணை நடைபெற்றுவருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கர்நாடகாவில் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் லாபத்திற்காக இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளதா என்ற ரீதியிலும் விசாரணை நடத்தப்படவேண்டும்.
ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்து விடலாம்.ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட கூடாது.இது தான் இந்தியாவின் நீதிக்கான முத்திரை வாக்கியம். எனவே நடுநிலையான புலனாய்வு தேவை.சரியான குற்றவாளிகள் கைதுச் செய்யப்படவேண்டும் என மத்திய அரசை பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக் கொள்கின்றது.இவ்வாறு அ.காலித் முஹம்மது தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment