Friday, April 12, 2013

தீண்டாமை-சமூக கொடுமைகள் குறித்த ஆய்வறிக்கையை வெளியிடமாட்டோம்-குஜராத் மோடி அரசு பிடிவாதம்!

                          12 Apr 2013 gujarat2
 
      புதுடெல்லி:போலியான வளர்ச்சி மாயையை காட்டி பிரதமர் கனவில் மிதந்து வரும் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை நரேந்திரமோடி தலைமையிலான அரசு, அங்குநிகழும் தீண்டாமை மற்றும் சமூக கொடுமைகள் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட மறுத்துள்ளது.
 
      குஜராத் மாநிலத்தில் தலித் – பழங்குடியின மக்கள் சந்திக்கும் தீண்டாமை மற்றும் இதர சமூக கொடுமைகள் குறித்து 2009-ஆம் ஆண்டு தன்னார்வ தொண்டு நிறுவனமான நவஸர்ஜன் என்ற அமைப்பும், இதர 3 அமைப்புகளும் இணைந்து ஆய்வு ஒன்றை நடத்தியது.
 
      தீண்டாமை உள்பட 99 வகையான சமூக பாரபட்சங்கள் குஜராத்தின் ஆயிரத்திற்கும் அதிகமான கிராமங்களில் தீவிரமாக அமலில் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாநில அரசு தீண்டாமையைக் குறித்து அறிய மோடி அரசு 2010-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தனியாக ஒரு குழுவை நியமித்தது.
 
     இந்த அறிக்கையின் நகலை கோரி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி கிரித் ராத்தோர் என்பவர் அளித்த மனுவை மோடி அரசு நிராகரித்து தர முடியாது என்று மறுத்துள்ளது.

     குஜராத் மாநிலத்தில் தீவிரமாக உள்ள சமூக கொடுமைகளை வெளியுலகிற்கு தெரியாமலிருக்கவே அறிக்கையை அரசு மூடி மறைப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இந்த அறிக்கையை வெளியிட்டால் சட்டம்-ஒழுங்கு நிலை சீர்குலையும் என்று மோடி அரசு கூறுகிறது. இது பொய்யான வாதம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
 
     மேல் சாதிக்காரர்களின் தாக்குதல் ஏற்படாமலிருக்க தலித்துகள் அனைத்தையும் பொறுத்து வருகின்றார்கள் என்று அட்டவணைச் சாதியினர் நலத்துறை அதிகாரி கூறுகிறார்.

0 comments:

Post a Comment