Thursday, April 11, 2013

உலக போர்க்களங்களில் அதிகம் பாதிக்கப்படும் சிறார்கள்!

                        11 Apr 2013 Sexual Violence The Hidden Conflict Crisis Stalking Children1
 
     லண்டன்:உலகின் பல்வேறு போர்க்களங்களில் பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் வன்கொடுமைகளில் அதிகமாக சிறார்களே பாதிக்கப்படுவதாக சேவ் த சில்ட்ரன்என்ற அமைப்பு கூறியுள்ளது.

     கொலம்பியா, லைபீரியா மற்றும் காங்கோ உட்பட கடந்த பத்து ஆண்டுகளில் மோதல்கள் நடந்த பல இடங்களில் பெறப்பட்ட தகவல்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் அந்த அமைப்பு இந்த முடிவுக்கு வந்துள்ளது.
 
     ஜி 8 குழுவின் மாநாட்டின் போது பாலியல் வல்லுறவு குறித்த விவகாரத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று பிரிட்டன் கூறியுள்ளது.
 
     இத்தகைய வன்செயல்களை முடிவுக்கு கொண்டுவந்து அவற்றில் இருந்து சிறார்களை மீட்பதற்கான திட்டங்களுக்கு போதுமான நிதி கிடையாது என்று சேவ் தசில்ட்ரன் கூறியுள்ளது.

0 comments:

Post a Comment