கர்நாடக சட்டமன்றத்தேர்தல் வரும் மே 5 ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் எஸ்.டி.பி.ஐ , பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
இதனையொட்டி எஸ்.டி.பி.ஐ மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளின் தலைவர்கள் பெங்களூரில் ஒன்று கூடி முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டனர். மொத்தம் உள்ள 240 தொகுதிகளில் முதல் கட்டமாக பகுஜன் சமாஜ் கட்சி 93 இடங்களில் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. எஸ்.டி.பி.ஐ 17 இடங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மீதமுள்ள தொகுதிகளில் வேட்பாளர்கள் இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கப்பட உள்ளனர். கர்நாடக மாநிலத்தலைவர், அப்துல் மஜித் மைசூர் மாவட்டம் நரசிம்ஹராஜா தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும், புலிகேசி நகர், சாம்ராஜ்பேட், சர்வஜ்னா நகர், ஹெப்பல், சிக்பேட், பீஜாபூர், சாம்ராஜா, கப்பு, மங்களூர், மங்களூர் தெற்கு, மங்களூர் வடக்கு, பன்த்வால், மொடிபைதேரி,ஷாப்பூர், சுல்லியா, புத்தூர் ஆகிய 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் ஆளும் பா.ஜ.க , காங்கிரஸ் , மதச்சார்பற்ற ஜனதா தளம் என மூன்று பெரிய கட்சிகளின் கூட்டணியை எதிர்த்து எஸ்.டி.பி.ஐ போட்டியிடுகிறது. மேற்கண்ட 3 கட்சிகளிலும் பெரும் தொழில் அதிபர்களும், ஊழல் பேர்வழிகளும், குற்றப்பிண்ணனி உடையவர்களும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சமூக சேவையில் தங்களை முழு நேரம் ஈடுபடுத்திக்கொண்டவர்களும், மனித உரிமைப்போராளிகளும், கல்வியாளர்களும், எஸ்.டி.பி.ஐ யின் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற எஸ்.டி.பி.ஐ இத்தேர்தலிலும் சாதிக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு
0 comments:
Post a Comment