Saturday, April 13, 2013

வகுப்புவெறியூட்டும் பேச்சு:கர்நாடகா துணை முதல்வர் மீது கிரிமினல் வழக்கு!

                           13 Apr 2013 Karnataka State
 
     ஷிமோகா:சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக உணர்ச்சியை தூண்டும் வகையில் வகுப்பு வெறி உரையாற்றிய கர்நாடகா மாநில பா.ஜ.க அரசின் துணை முதல்வர் கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது கிரிமினல் வழக்கு பதிவுச்செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகளின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 
     கடந்த ஞாயிற்றுக்கிழமை கே.எஸ்.ஈஸ்வரப்பா உணர்ச்சியை தூண்டும் வகுப்புவாத உரையை ஆற்றினார். இதுத் தொடர்பான வீடியோ காட்சிகளின் பதிவுகள் அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளன. இதன் அடிப்படையில் வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது. ஈஸ்வரப்பா மீது மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவர் ஸெய்த் டபிள்யூ என்பவர் அளித்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதுடன் ஒரு சமுதாயத்தை இன்னொரு சமுதாயத்திற்கு எதிராக கிளம்ப தூண்டும் வகையில் ஈஸ்வரப்பா பேசினார் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. ஈஸ்வரப்பா குற்றவாளி என்பது நிரூபணமானால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும்

0 comments:

Post a Comment