16 Apr 2013
கராகஸ்:வெனிசுலா நடைபெற்ற அதிபர் தேர்தலில் மறைந்த முன்னாள் அதிபர் ஹியூகோ சாவேஸின் ஆதரவாளரான நிகோலஸ் மதுரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சோசியலிசக் கொள்கையாளரான நிக்கோலாஸ் மதுரோ 50.7 வீதமான வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்துள்ளார். எதிரணி வேட்பாளர் ஹென்ரிக் காப்ரில்ஸ் 49.1 % வாக்குகளைப் பெற்றுள்ளார். வாக்குப்பதிவு நடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்தல் அசம்பாவிதங்கள் நடந்துள்தாக எதிரணி ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதனால் வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவிடவேண்டுமென்று தோல்வியடைந்த எதிரணி வேட்பாளர் ஹென்ரிக் காப்ரில்ஸ் கேட்டுக்கொண்டுள்ளார். தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து நிக்கோலாஸ் மதுரோவின் ஆதரவாளர்கள் வீதிகளில் பெரும் ஆரவாரங்களிலும் கொண்டாட்டங்களிலும் ஈடுபட்டுவருகின்றனர்.
கடந்த மார்ச் 5-ம் திகதி புற்றுநோயினால் உயிரிழந்த அதிபர் சாவேஸின் மறைவுக்குப் பின்னர் வெனிசூவேலாவின் தற்காலிக அதிபராக மதுரோவே பதவிவகித்தார். வரும் 19-ம் திகதியன்று பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ள புதிய அதிபர் மதுரோவின் ஆட்சிக்காலம் 2019-ம் ஆண்டு ஜனவரியில் முடிகின்றது
0 comments:
Post a Comment