Tuesday, April 23, 2013

கருணாநிதி காலில் விழுந்த நக்கீரன் காமராஜ்

கருணாநிதி காலில் விழுந்த நக்கீரன் காமராஜ்
அதிமுகவை கலக்கும் நிழல் முதல்வர்கள் என்ற அட்டைப்பட செய்தியுடன், டிசம்பர் 05-07ம் நக்கீரன்
இதழில் நான்கு பக்க செய்தி வெளியானது.
இந்த செய்தியில் உள்ள அனைத்து தகவல்களும் தவறானவை. இந்த செய்தி, திமுக ஆட்சியில் ஊழலுக்கு
பஞ்சமில்லை, கருணாநிதிக்கு நிர்வாகத் திறமை இல்லை என்பதை சுட்டிக்காட்டியது.
அதிமுகவை கலக்கும் நிழல் முதல்வர்கள் செய்திக்கு, மக்கள்செய்திமையம் மூலம் தவறான செய்தி என்பதை
ஆதாரங்களுடன் வெளியிட்டோம்.
திமுக ஆட்சியில் ஊழலுக்கு பஞ்சமில்லை, கருணாநிதிக்கு நிர்வாகத் திறமை இல்லை அம்பலாமாக்கிய நக்கீரன்
பத்திரிகை என்று நான்கு பக்கங்களில் கலர் துண்டு பிரசுரம் வெளியீட்டு, தமிழ்நாடு முழுவதும் அனைத்து தரப்பு
மக்களுக்கும் சேரும் வகையில் விநியோகம் செய்தோம்.
துண்டு பிரசுரத்தை, பார்த்த திமுக தலைவர் கருணாநிதி, அதிர்ச்சியடைந்தார். நக்கீரன் இணை ஆசிரியர் கம்
மாபியா பத்திரிகையாளர் காமராஜ்யை, கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் செல்போன் மூலம் அழைத்தார்.
அலறி அடித்துக்கொண்டு, திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார் நக்கீரன் காமராஜ்.. என்னய்யா.. என்றுமக்கள் செய்தி மையத்தின் துண்டு பிரசுரம் பற்றி கேட்க, ஆடிப்போன் நக்கீரன் காமராஜ், செய்தியில் தப்பாகிவிட்டதுஎன்று ஒத்துக்கொண்டார். கருணாநிதியிடம் கெஞ்சினார். சரி போய்யா என்றவுடன், கருணாநிதியின் காலை தொட்டுகும்பிட்டுவிட்டு, வெளியே வந்தார்.
துண்டு பிரசுரத்தை பார்த்த, திமுகவின் பொருளாளரும், இளைஞர் அணி அமைப்பாளரும், முன்னாள்
துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் கோபமடைந்தார். துண்டு பிரசுரத்தில் உள்ள தகவல்கள் உண்மைதான்
என்று தெரிந்தது. இனி நக்கீரன் ஆசிரியர், இணை ஆசிரியர் காமராஜ் இருவரை அறிவாலாயம், கோபாலபுரம்
பக்கம் அனுமதிக்காதீர்கள் என்று உத்தரவிட்டுள்ளார் என்று தெரிகிறது.
திமுக தலைவர் கருணாநிதியை பார்த்துவிட்டு வெளியே வந்து காரில் அமர்ந்துக்கொண்டு, நக்கீரன் ஆசிரியர் கோபாலை
தொடர்புக்கொண்டு கருணாநிதியை சந்தித்த போது நடந்தவைகளை சொன்னார்.
நக்கீரன் கோபாலும் பார்த்துக்கொள்ளலாம் தம்பி, அன்பு பயலை ஒரு கைப்பார்த்துக் கொள்ளலாம் என்றார்.

தொடர்ந்து அம்பத்தூரில் நக்கீரன் பத்திரிகையின் அச்சு இயந்திரங்களை கொண்டு செல்வதைப்பற்றியும் பேசினார்கள்.(நக்கீரன் கோபால் கீழ்ப்பாக்கத்தில் நடத்தி வந்த ஒரியண்ட் பள்ளியை மூடிவிட்டு, அதை ரூ2.70 கோடிக்கு
விற்றுவிட்டார்கள். அந்த பணத்தில் அம்பத்தூரில் இடம் வாங்கி, நக்கீரன் பத்திரிகையின் அச்சு இயந்திரங்களை
அங்கு மாற்ற முடிவு செய்துள்ளார்கள்)

உடனே அங்கிருந்து காஸ்மோ பாலிட்டன் கிளப்புக்கு போய், மது அருந்திவிட்டு புலம்பியபடி பெசண்ட் நகர் வீட்டுக்கு சென்றார்
நக்கீரன் இணை ஆசிரியர் காமராஜ்.
நக்கீரன் பத்திரிகையின் அலுவலகத்தில், தன் அறையில் தந்தை பெரியார் படத்தை மாட்டி உள்ள காமராஜ், பெரியாரின்
கொள்கைக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், அதிமுகவை கலக்கும் நிழல் முதல்வர்கள் செய்தி தொடர்பாக, தமிழக அரசு நக்கீரன் பத்திரிகையின்
ஆசிரியர் கோபால், மற்றும் நக்கீரன் இணை ஆசிரியர் காமராஜ் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.
தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் மக்கள்செய்திமையமும் சேர்ந்து கொள்ள, மனுத்தாக்கல் செய்ய முடிவு
செய்யப்பட்டுள்ளது.

வழக்கில், மக்கள்செய்திமையம் அதிமுகவை கலக்கும் நிழல் முதல்வர்கள் செய்தி தவறான,
பொய் செய்தி என்பதை ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் வாதாட உள்ளது என்ற செய்தியை
வாசர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம். thanks, makkalseithimaiyam

0 comments:

Post a Comment