13 Apr 2013
புதுடெல்லி:காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை கவிழ்க்க ஒரு மூத்த தலைவர் தன்னை அணுகியதாக பா.ஜ.கவின் முன்னாள் தேசிய தலைவர் நிதின் கட்கரி தகவலை வெளியிட்டுள்ளார். நாக்புரியில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய கட்கரி கூறியதாவது:இரண்டாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை கவிழ்க்க வேண்டுமென என்னை ஒரு மூத்த தலைவர் அணுகினார். அப்போது நான் பா.ஜ.க தேசிய தலைவராக இருந்த சமயம். ஆனால் அவருடைய கோரிக்கையை நான் உடனடியாக நிராகரித்தேன். எனக்கு நேர்மையான வழிதான் தெரியும். எதைச் செய்ய வேண்டுமோ அதை வெளிப்படையாகச் செய்வேன். எனக்கென தனி திட்டம் எதுவும் கிடையாது. யார் முதுகிலும் நான் குத்த மாட்டேன் என்று கூறினார். அதேவேளையில் மத்திய அரசை கவிழ்க்க தன்னை அணுகிய தலைவர் யார் என்பதை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
0 comments:
Post a Comment