Monday, April 22, 2013

BSP ?

     தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக்கொண்ட யானை :

      பாபர் மசூதியை இடித்தவனுக்கு "எம்பி" சீட்டு! 9% மட்டுமே உள்ள பிராமணருக்கு 50% ஒதுக்கீடு!!

      உத்தரப்பிரதேச மாநிலத்தின் 80 தொகுதிகளில் 36 தொகுதிகளுக்கான BSP கட்சி சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

      பாபர் மசூதி இடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவனான "சிவசேனா" முன்னாள் கவுன்சிலர் "பவன் பாண்டே" என்பவனை சுல்தான்பூர் தொகுதி வேட்பாளராக அறிவித்து கவுரவித்துள்ளார், மாயாவதி.

      மாநிலத்தில் 9% மட்டுமே உள்ள பிராமணர்களுக்கு 50% தொகுதிகளை ஒதுக்கியுள்ளார்.

      அறிவிக்கப்பட்ட 36 தொகுதிகளில் 18 தொகுதிகளில் பிராமண சமுதாயத்தினர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

      20% மக்கள் தொகை கொண்ட முஸ்லிம் சமூகத்துக்கு ஓரிரு சீட்டுகள் மட்டுமே ஒதுக்கி, முஸ்லிம்களை புறக்கணித்துள்ளார், மாயா.

      தொடர்ந்து முஸ்லிம் விரோத போக்கை கடைப்பிடித் வருகிறது BSP.

      கடந்த 3 மாதங்களுக்கு முன், அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகள் விஷயத்தில் பல கட்சிகளும் "மாநிலங்களவையில்" முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

      முஸ்லிம்களின் விடுதலை குறித்து, அவை ஸ்தம்பிக்கும் அளவுக்கு, சூடாக விவாதம் நடந்துக் கொண்டிருந்தபோது, அந்த விவாதத்தையே "திசை திருப்பும்" வகையில், வேறு பிரச்சினையை கையிலெடுத்தனர், BSP நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

      கடந்த காலங்களில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்து செயல்பட்ட மாயாவதி, தற்போதும் "பாஜகவின் ஊதுகுழலாகவே" செயல்பட்டு வருகிறார்.

      "நிமேஷ் கமிஷன்" அறிக்கையை ஏற்று, முஸ்லிம் சிறைவாசிகள் சிலரை விடுவிக்க உத்தரப் பிரதேச அரசு முயன்றபோது, பாஜகவுடன் சேர்ந்துக் கொண்டு, முஸ்லிம் விடுதலைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்ததும் BSP தான்.

      3 தினங்களுக்கு முன் வெளியிடப்பட்ட BSPன் இந்த வேட்பாளர் பட்டியலும் பிராமணர்களின் கன்வென்ஷனில் வைத்து தான் வெளியிட்டார்,மாயாவதி.

      ஒரு வேலை அடுத்த பட்டியளிலாவது முஸ்லிம்களுக்கு உரிய வாய்ப்பளிப்பார், என்ற நம்பிக்கையுடன் எதிர்ப்பார்த்து வருபவர்களுக்கும் இதுவரை ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

      பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் நோக்குடன், அந்த தொகுதிகளை கையில் வைத்துள்ளாரா? எனவும் யோசிக்க வைத்துள்ளார்.

     பாபர் மசூதி இடிப்பு வழக்கில், முக்கிய குற்றவாளியான "பவன் பாண்டே" மீது, நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் "குற்றப்பத்திரிக்கை" தாக்கல் செய்யப்பட்டு, குற்றவாளிக் கூண்டில் நிற்கும் இந்த முஸ்லிம் விரோதிக்கு "சீட்" வழங்கி கவுரவிக்கும், BSPன் இந்த செயல் முஸ்லிம்கள் மத்தியில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
 

0 comments:

Post a Comment