Sunday, April 14, 2013

ஈராக்கின் பொக்கிஷங்களை திருடும் அமெரிக்கா!

                            13 Apr 2013 US looted thousands of Iraqs cultural treasures-Iraqi archaeologist
 
     ஈராக்கின் வரலாற்று பொக்கிஷங்களை அமெரிக்கா திருடி சென்றுள்ளதாக அந்நாட்டின் தொல்பொருள் ஆராச்சியாளர் ஒருவர் தெரவித்துள்ளார். ஈராக்கின் தேசிய அருங்காட்சியத்திலிருந்து 35,000 த்திற்கும் அதிகமான சிறிய மற்றும் பெரிய பொக்கிஷங்களை அமெரிக்கா எடுத்துச் சென்றுள்ளதாக தொல்பொருள் ஆராச்சியாளரான இஹ்சான் பாத்தி பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
 
     மேலும் பல விலை மதிக்க முடியாத வரலாற்று ஆவணங்களும் அமெரிக்காவால் திருடப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஈராக்கின் மத்திய வங்கி மற்றும் இன்னப்பிற வங்கிகளில் இருந்த அதிகமான பண நோட்டுகளையும் எந்தவித ஆவணமும் செய்யப்படாமல் அமெரிக்காவால் திருடிச் செல்லப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை வலுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதத்தில் யுனெஸ்கோ துணை இயக்குனர் மௌனிர் பௌசெனகி கடந்த 2003 ஆம் ஆண்டு ஈராக்கை அமெரிக்காவும் பிரிட்டனும் ஆக்கிரமித்தபோது 1500 க்கும் அதிகமான ஓவியங்களையும், சிற்பங்களையும் பாக்தாத் அருங்காட்சியத்திலிருந்து திருடியுள்ளனர் என்று ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment