Thursday, April 11, 2013

பிரதமர் கனவில் மிதக்கும் மோடி – ஐக்கிய ஜனதா தளம் கடும் தாக்கு!

11 Apr 2013
 
     புதுடெல்லி:எப்படியாவது பிரதமராகி விட வேண்டும் என குஜராத் முதல்வர் நரேந்திரமோடி விரும்புகிறார் என பா.ஜ.கவின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கடுமையாக சாடியுள்ளது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் சிவானந்த திவாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறியிருப்பது:பிரதமர் பதவியை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி விரும்புகிறார். பா.ஜ.க. ஆட்சிமன்றக் குழு முடிவு செய்பவர் தான் பிரதமர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்ட நிலையில் தான் மட்டுமே பிரதமர் வேட்பாளர் என்ற நினைப்பில் அவர் செயல்படுகிறார்.
 
     பீகார் போன்ற மாநிலங்கள் குஜராத் மாநில முன்னேற்றத்தை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என அவர் கூறுவது வேடிக்கையாக உள்ளது. அவர் பீகார் மாநில முன்னேற்றத்தை பார்த்து அறிந்து கொள்ளலாம். அவர்தான் தான் அடுத்த பிரதமர் என்ற நினைப்பில் மோடி பேசி வருகிறார். நலிந்த தரப்பினர் முன்னேற வாய்ப்பு தருவது தான் பீகார் மாநில முன்னேற்றம். பீகாரின் வளர்ச்சி விகிதம் குஜராத் மாநிலத்தை விட சிறப்பானதாகும் என்றார் திவாரி.
 
     திரிணாமுல் – பா.ஜ.க ரகசிய கூட்டு!-காங்கிரஸ் குற்றச்சாட்டு!கொல்கத்தா:திரிணமூல் காங்கிரஸ்-பா.ஜ.க. இடையே ரகசிய கூட்டு உள்ளது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மாநில காங்கிரஸ் தலைவர் பிரதீப் பட்டாச்சார்யா கூறியதாவது:நரேந்திரமோடி கொல்கத்தா வருகையின் போது, முதல்வர் மம்தா பானர்ஜி தில்லி சென்றிருப்பது ஏன்? திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.கவுக்கும் இடையே ரகசிய கூட்டு உள்ளது. மம்தா அரசின் செயல்பாட்டை அனைத்து தரப்பினரும் கண்டித்து வருகின்றனர். இந்நிலையில் அவருக்கு நரேந்திரமோடி பாராட்டு தெரிவிப்பது வியப்பை ஏற்படுத்துகிறது. மோடியின் பாராட்டு குறித்து முதல்வர் மம்தா கருத்து கூறாவிட்டால் இரு கட்சிகளுக்கும் இடையே ஆழ்ந்த அரசியல் உறவு உள்ளது என கருத வேண்டி இருக்கும்

0 comments:

Post a Comment