Monday, April 22, 2013

குஜராத் கலவரக்காரர்கள் தண்டிக்கப்பட வில்லை விசாரணை அமைப்புகள் மோடிக்கு ஆதரவாக செயல்படுகின்றன அமெரிக்க அரசின் அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்:

                                  modi
     குஜராத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற முஸ்லீம்களுக்கு எதிரான இனப்படுகொலையில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பெண்கள் கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர். உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த இனப்படுகொலை குறித்து அமெரிக்காவின் நாடாளுமன்றத்தின் உத்தரவுப்படி அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது. 60 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் கலவரத்திற்கு முக்கிய காரணமாக நரேந்திர மோடி தண்டிக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
     மேலும் இனப்படுகொலை குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட எல்லா விசாணை மன்றங்களும் மோடிக்கு போலியான நற்சான்று அளித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மோடியின் குற்றத்தை மறைப்பதற்காக பெருமளவு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், குஜராத்தில் அப்பாவி முஸ்லீம் இளைஞர்கள் போலி எண்கவுன்டர்கள் மூலம் கொல்லப்படுவதாகவும், போலி வழக்குகளில் சிறையில் அடைக்கப்படுவதாகவும், வழக்குகள் வேண்டுமென்றே பல ஆண்டுகளுக்கு இழுத்தடிக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் ஆதராங்களுடன் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் சிறைச்சாலைகள் கடும் சித்தவதைக்கூடங்களாக உள்ளதாகவும் அந்த அறிக்கை கவலை தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் தான் மோடிக்கு விசா வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment