Sunday, April 14, 2013

எல்லா நம்பிக்கைகளும் அஸ்தமித்துவிட்டன!-புல்லரின் மனைவி!

                                                          14 Apr 2013 Bhullar
 
      புதுடெல்லி/அமிர்தரஸ்:தனது கணவரின் மரணத்தண்டனை ஆயுள்தண்டனையாக குறைக்கப்படும் என்ற நம்பிக்கை அஸ்தமித்துவிட்டதாக புல்லரின் மனைவி நவனீத் கவுர் தெரிவித்துள்ளார். புல்லரின் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்ட சூழலில் அவரது மனைவி இவ்வாறு தெரிவித்துள்ளார். 1993 ஆம் ஆண்டு டெல்லி இளைஞர் காங்கிரஸ் அலுவலகத்தில் கார்க்குண்டுவெடிப்பு மூலம் ஒன்பது பேரை கொலைச் செய்த வழக்கில் மரணத்தண்டனை விதிக்கப்பட்டு கருணை மனுவும் நிராகரிக்கப்பட்ட நிலையில், கருணை மனுவை நிராகரிக்க காலதாமதம் ஏற்பட்டது என்பதால் தண்டனையை குறைக்ககோரி தேவேந்திர புல்லர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இது தொடர்பாக புல்லரின் மனைவி நவனீத் கவுர் கூறியது:எங்களின் வாதத்தை நீதிமன்றம் பரிசீலிக்கவில்லை. 18 ஆண்டுகள் சிறையில் கழித்ததால் புல்லரின் தண்டனையை நீதிமன்றம் குறைக்கும் என்று எதிர்ப்பார்த்தோம்.எங்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. நான் இந்திய நீதிபீடத்தின் மீதான அனைத்து நம்பிக்கைகளையும் இழந்துவிட்டேன்.
 
     1984 ஆம் ஆண்டு நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்திற்கு காரணமானவர்களை ஏன் தண்டிக்கவில்லை? ஆதாரங்கள் இருந்தபோதும் கிஷோரிலால், ஜகதீஷ் டைட்லர், ஸஜ்ஜன் குமார் ஆகியோர் தண்டிக்கப்படவில்லை. ஆனால், ஆதாரங்கள் இல்லாதபோதும் புல்லர் தண்டிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு நவனீத் கவுர் தெரிவித்துள்ளார். அதேவேளையில் உச்சநீதிமன்றம் புல்லரின் மனுவை நிராகரித்தது சீக்கிய சமுதாயத்தின் உணர்வை காயப்படுத்தியுள்ளதாக சிரோன்மணி குருத்வாரா கமிட்டி தெரிவித்துள்ளது

0 comments:

Post a Comment