30 Apr 2013
புதுடெல்லி:கடற்படை தொடர்பான ரகசிய தகவல்களை ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டதாக 3 அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை பாதுகாப்புத் துறை அமைச்சகம், பாதுகாப்புக்கான நாடாளுமன்ற குழுவிடம் தெரிவித்துள்ளது.
பல்வேறு தவறுகளை செய்ததாக முப்படைகளில் அதிகாரிகள் நிலையில் இருந்து வீரர்கள் நிலை வரை உள்ளவர்களில் 219 பேர் மீது பல்வேறு ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ரகசியமாக காக்கப்பட வேண்டிய விஷயங்களை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தியதாக 2011-ம் ஆண்டில் 4 அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. விசாரணைக் குழு இதனை ஆய்வு செய்து, 3 பேரை பணி நீக்கம் செய்ய பரிந்துரைத்தது. இதன் அடிப்படையில் அவர்களை பதவி நீக்க முறைப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதே போல ரஷிய பெண் ஒருவருடன் தவறான தொடர்பு வைத்திருந்ததாக கமாண்டர் நிலையில் உள்ள ஒரு அதிகாரி 2011-ம் ஆண்டில் விசாரணைக்குப் பின் பணி நீக்கம் செய்யப்பட்டார். விமானப்படை மீது உள்ள பெரும்பாலான குற்றச்சாட்டுகள் லஞ்சம், ஊழல் தொடர்பானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் கடற்படை அதிகாரிகள் தங்களுக்குள் மனைவிகளை மாற்றிக் கொள்கிறார்கள் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. கடற்படை அதிகாரி ஒருவரின் மனைவியே இக்குற்றச்சாட்டை கூறினார். இது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
0 comments:
Post a Comment