Friday, April 19, 2013

பெங்களூர்:பா.ஜ.க அலுவலகம் அருகே குண்டுவெடிப்பு!16 பேர் காயம்!

                          18 Apr 2013 Blast outside BJP office in Bangalore
 
     பெங்களூர்:கர்நாடகா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்கள் மீதமிருக்கவே, ஆளும் பா.ஜ.க கட்சியின் அலுவலகம் அருகே குண்டுவெடித்துள்ளது. இக்குண்டுவெடிப்பில் 16 பேருக்கு காயம் ஏற்பட்டது. இவர்களில் 11 பேர் போலீஸ்காரர்கள் ஆவர். ஐந்து வாகனங்கள் குண்டுவெடிப்பில் தீக்கிரையாகின. காருக்குக்கும், வேனுக்குமிடையே நிறுத்தப்பட்டிருந்த பைக்கில் நிறுவப்பட்டிருந்த குண்டு வெடித்துள்ளது. நேற்று காலை 10.30 மணியளவில் குண்டுவெடித்தது. தேர்தலுக்காக பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டிருந்த போலீசாருக்கு இக்குண்டுவெடிப்பில் காயம் ஏற்பட்டுள்ளது. 3 பெண்கள் உள்பட ஐந்து சாதாரண மக்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
 
      தமிழ்நாடு பதிவு எண் கொண்ட பைக்கில் குண்டுவைக்கப்பட்டிருந்ததாக போலீஸ் உறுதிச் செய்துள்ளது என்று பா.ஜ.க தலைவர்கள் கூறுகின்றனர். குண்டுவெடிப்பில் வாகனங்கள் தீப்பற்றி எரிந்ததை கண்டு வெளியே குதித்த போலீசாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் இரண்டு பேர் கல்லூரி மாணவர்கள் ஆவர். பெங்களூர் குண்டுவெடிப்பு குறித்து மத்திய அரசு விசாரணை நடத்தும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே கொல்கத்தாவில் தெரிவித்தார். கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான மனு தாக்கல் செய்வதற்கு நேற்று(புதன் கிழமை) கடைசி தினமாகும். தேசிய புலனாய்வு ஏஜன்சி சம்பவ இடத்திற்கு வந்துள்ளதாக கர்நாடகா அமைச்சர் ஆர்.அசோக் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment