- மத நல்லிணக்கத்தை பற்றி பேச இந்து முன்னணிக்கு அறுகதை இல்லை சிறுபான்மை கமிஷன் தலைவர் பிரகாஷ் அவர்களின் முயற்சியை திசை திருப்பும் ராமகோபாலனுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்
தமிழக சிறுபான்மை கமிஷன் தலைவர் பிரகாஷ் அவர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று சிறுபான்மை சமூகங்களிடம் அவர்களது கோரிக்கைகளை கேட்டு தமிழக அரசுக்கு தனது பரிந்துரை மற்றும் அறிக்கையினை அனுப்பி வருகின்றார். அதன்படி கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் சங்க பரிவார இயக்கங்கள் சிறுபான்மையினருக்கு தொடர்ந்து இழைத்து வரும் அச்சுறுத்தல் குறித்து ஊட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீப காலமாக கோவை மாவட்டத்தில் சிறுபான்மையினர் மீதான சங்க பரிவார்களின் தொடர் தாக்குதல் அதிகரித்து வருகின்றது. நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல் துறை கலவரம் செய்ய முயற்ச்சிக்கும் சங்கபரிவார இயக்கங்களை சார்ந்தவர்களை கைது செய்யாமல் ஒரு சார்பாக முஸ்லீம்கள் மீது மட்டும் வழக்கு பதிந்து வருகின்றனர்.
சட்டத்திற்கு முரணாக இந்து முன்னணி நடத்திய கடையடைப்பு போராட்டத்தை தடுக்க கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த கடையடைப்பின் போது 15 க்கும் மேற்ப்பட்ட பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. வணிகர்களை நிர்ப்பந்தப்படுத்தி கடைகளை அடைக்கச் செய்துள்ளனர். இது போன்ற அடிப்படையில் மதக்கலவரங்களை ஏற்படுத்தி அதில் அரசியல் இலாபம் அடையத் துடிக்கும் ராமகோபாலன் போன்ற சங்க பரிவார ஃபாசிஸ்டுகளுக்கு மதநல்லிணக்கத்தை பற்றி பேச அறுகதை இல்லை. சிறுபான்மை கமிஷன் தலைவர் பிரகாஷ் அவர்களின் ஆக்கபூர்வமான முயற்ச்சியை திசைதிருப்புவதாகவே ராமகோபாலன் அறிக்கை அமைந்துள்ளது. திரு.பிரகாஷ் அவர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது.
கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து வரும் பதட்டமான சூழ்நிலை மாறவேண்டுமென்றால் தமிழக அரசு இது விஷயத்தில் நேரடியாக தலையிட்டு பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும், வகுப்புவாத சிந்தனையுடன் செயல்படும் சங்க பரிவார ஃபாசிஸ்டுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக் கொள்கின்றது .thanks. asia
0 comments:
Post a Comment