10 Apr 2013
கொல்கத்தா:மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் மோடி கலந்துகொண்டு பேசிய ஹோட்டலுக்கு வெளியே மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொல்கத்தாவில் தொழிலதிபர்கள் கூட்டத்தில் நரேந்திர மோடி கலந்துகொண்டுபேசினார்.
அப்பொழுது இந்நிகழ்ச்சி நடைபெற்ற ஹோட்டலுக்கு வெளியே மக்கள் திரண்டு மோடிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் கறுப்புக் கொடிகளை ஏந்தியபடி, மோடி வெளியேற வேண்டும் என்று கோஷமிட்டனர்.
இனவாத சக்திகளின் ஏஜெண்டாக மோடி செயல்படுவதாகவும், கொல்கத்தாவுக்கு வருவதற்கு அவருக்கு தகுதி இல்லை என்றும் குரல் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டம் நடத்திய 3 பெண்கள், நக்சலைட் மாணவர் இயக்கங்கள், மாணவர் ஜனநாயக முன்னணி, அனைத்திந்திய மாணவர் கூட்டமைப்பின் மாணவர்கள் உள்ளிட்ட 21 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
0 comments:
Post a Comment