Wednesday, April 10, 2013

இந்திராகாந்தியின் வீட்டில் அமெரிக்காவுக்கு தகவல் அளிக்கும் ஆள் இருந்தார் – விக்கிலீக்ஸ்!

                       10 Apr 2013 US had 'sources' in Indira Gandhi household1
     புதுடெல்லி:அவசரக் காலக்கட்டத்தில் பிரதமர் இந்திராகாந்தியின் வீட்டில் அமெரிக்காவிற்கு தகவல்களை அளிக்கும் ஆள் இருந்தார் என்று விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்கள் கூறுகின்றன. பிரதமரின் அரசியல் காய்நகர்த்தல்களை புரிந்து தகவல்களை அளிப்பதே இதன் நோக்கம்.
 
     1975-ஆம் ஆண்டு ஜூன் 26-ஆம் தேதி அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட மறு நாள் அமெரிக்க தூதரகத்திற்கு அனுப்பிய செய்தியில், இந்திராவின் நடவடிக்கைக்கு பின்னணியில் மகன் சஞ்சய்காந்தியும், செயலாளர் ஆர்.கே.தவானும் இருந்ததாக கூறப்படுகிறது.
 
     இரண்டுபேருக்கும் கொள்கை ரீதியாக நோக்கம் எதுவும் இல்லை என்றும், இந்திராவை அதிகாரத்தில் நிலைநிறுத்தவேண்டும் என்பது மட்டுமே நோக்கம் எனவும் அமெரிக்க தூதரகத்திற்கு அனுப்பிய செய்தி கூறுகிறது.
 
     1977-ஆம் ஆண்டு இந்திரா காந்தி பொதுத் தேர்தலை நடத்துவார் என்று 1976-ஆம் ஆண்டின் பாதியிலேயே அமெரிக்க தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது

0 comments:

Post a Comment