Tuesday, April 2, 2013

தீவிர ஹிந்துத்துவாவாதிகளையும், க்ரிமினல் குற்றவாளிகளையும் உள்ளடக்கி பா.ஜ.கவின் தேசிய தலைமையில் மாற்றம்!

Parliamentary Board of the BJP
    
     புதுடெல்லி:பா.ஜ.கவின் தேசிய தலைமைப் பொறுப்புக்களில் ஏற்படுத்திய பெரும் மாற்றம் அக்கட்சி தீவிர ஹிந்துத்துவ பாசிச அஜண்டாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக கருதப்படுகிறது.
 
     பிரதமர் கனவில் மிதக்கும் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடிக்கு உரிய பதவியை வழங்கியுள்ள பா.ஜ.க, பாபரி மஸ்ஜித் இடிப்பில் முக்கிய பங்கினை வகுத்த உமா பாரதியை துணைத் தலைவராகியுள்ளார்.
 
     2006-ஆம் ஆண்டு ஆட்சி மன்றக்குழுவில் முதல்வர்கள் இடம்பெறக்கூடாது என்று கூறி மோடியை நீக்கிய ராஜ்நாத் சிங், மீண்டும் மோடிக்கு ஆட்சிமன்றக்குழுவில் இடம் அளித்துள்ளார்.மேலும் மோடியின் நம்பிக்கைக்குரியவரும், சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கு உள்பட ஏராளமான வழக்குகளில் தொடர்புடைய க்ரிமினல் குற்றவாளியான அமித் ஷா பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மோடிக்கு நெருக்கமான்வர்களான ஸ்மிர்தி இரானி, பல்பீர் பூஞ்ச் ஆகியோரும் துணைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
     தாங்கள் முன்மொழியும் நபர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸின் கோரிக்கையை பா.ஜ.க ஏற்றுக்கொண்டுள்ளது. அயோத்தியில் ராமர்கோவில் கட்டவேண்டும் என்று கடந்த கும்பமேளாவில் ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தியிருந்தது. இதன் காரணமாக உமாபாரதி துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். துணைச் செயலாளர்களான வி.சதீஷ், சவுதான்சிங் ஆகியோர் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு நெருக்கமானவர்கள்.முரளீதர் ராவு, பிரபாத் ஜா ஆகியோரும் ஆர்.எஸ்.எஸ்ஸுடன் நல்ல தொடர்பில் உள்ளனர்.சுதேசி ஜாக்ரன் மஞ்ச் கன்வீனர் முரளீதர் ராவு, கட்கரியின் நிர்வாகத்திலும் செயலாளராக பதவி வகித்தார்.அத்வானியின் ஆதரவுடன் இவர் இம்முறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
     தேர்தலில் கடும் சவாலை எழுப்பும் உ.பியில் வருண்காந்தியின் மூலம் ஆதாயம் அடையலாம் என்று கருதி தீவிர வகுப்புவாதியான வருணுக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில் வருண்காந்திக்கு முக்கிய பொறுப்பு அளித்ததற்கு உ.பி மாநில பா.ஜ.க தலைவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். காந்தி குடும்பத்தைச் சார்ந்த ஒருவருக்கு உயர் பதவி அளித்திருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். சிறுபான்மையினரை தாஜாச் செய்ய ஷானவாஸ் ஹுஸைன், முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோருக்கும் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது

0 comments:

Post a Comment