Tuesday, April 2, 2013

அரசியல் கட்சிகள் காலக்கட்டத்திற்கு முன்னுரிமை அளித்து செயல்படவேண்டும்! – எஸ்.டி.பி.ஐயின் புதிய தேசிய தலைவர் ஏ.ஸயீத்!

A Saeed
 
     கோவை:அரசியல் கட்சிகள் காலக்கட்டத்திற்கான முன்னுரிமைகளை கவனத்தில் கொண்டு செயல்படவேண்டும் என்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் ஏ.ஸயீத் கூறியுள்ளார்.
 
     கோவையில் எஸ்.டி.பி.ஐயின் தேசிய பிரதிநிதிகள் மாநாட்டில் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு உரையாற்றினார் அவர்.
 
அவர் தனது உரையில் கூறியது:
 
     இந்திய அரசியல் தற்போது நரேந்திரமோடியை சுட்டிக்காட்டுகிறது.மோடி பிரதமராகிவிடுவார் என்று பயமுறுத்துபவர்களும், மோடியை உயர்த்தி காட்டுபவர்களும் இவர்களில் உள்ளனர். நரேந்திர மோடி, ஒரு சமூகத்தை முற்றிலும் அழித்தொழிக்கும் பாசிசத்தையும், பொதுச் சொத்துக்களை பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்த்து வளர்ச்சியின் போலியான முகமூடியை அணிந்துள்ள ஏகாதிபத்தியத்தின் சின்னமாவார். வளர்ந்து வரும் மக்கள் விரோத கொள்கைகள் தாம் நாம் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளாகும். புறக்கணிக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அளித்து எஸ்.டி.பி.ஐ செயல்படும்.இந்தியாவில் மிகவும் புறக்கணிக்கப்பட்ட சமூகம் தலித்துகளாவர்.பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்களாவர்.இவ்வாறு ஏ.ஸயீத் கூறினார்.

0 comments:

Post a Comment