பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான் (58) ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அதில் கூறியிருப்பதாவது,
பாகிஸ்தானில் பெரும்பாலான அரசியல்வாதிகள் அமெரிக்காவின் கைப்பாவையாக, பொம்மையாக செயல்பட்டு வருகின்றனர். பாகிஸ்தானில் அமெரிக்கா ஆளில்லா விமானங்கள் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் கொல்லப்படுகிறார்கள். அமெரிக்கா நிதி உதவி தருகிறது என்பதற்காக ஒரு செயலற்ற பொம்மையாக அதிபர் சர்தாரி செயல்பட்டு வருகிறார். அமெரிக்க நிதியை பெற்று எங்கள் ராணுவத்தின் மூலம் சொந்த நாட்டு மக்கள் 35 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது மிகவும் கொடுமையாகும்.
ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின்போது அனுபவித்த இன்னல்களை விட தற்போது மிகுந்த கொடுமைகளை பாகிஸ்தான் மக்கள் அனுபவித்து வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் இருந்த அல்-கொய்தா தலைவர் பின்லேடனை அமெரிக்க ராணுவம் சுட்டு கொன்றது.
இதற்கிடையே பின்லேடனை பாதுகாத்து வந்ததாக பாகிஸ்தான் அரசை அமெரிக்காவின் உளவுத்துறை தலைவர் லியான பெனேட்டாடி குற்றம் சாட்டுகிறார். அது மிகவும் ஆபத்தானது. பாகிஸ்தானுக்குள் அமெரிக்க ராணுவம் புகுந்து பின்லேடனை கொன்றது நாட்டுக்கு அவமதிப்பாகும். இது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment