Thursday, September 29, 2011

உண்மையிலேயே சிதம்பரம் தவறு செய்துள்ளாரா ?



எப்போதிலிருந்து சிதம்பரத்திற்கு எதிரான இந்த திட்டமிட்ட பிரச்சாரம் மேற்கொள்ளப் பட்டு வருகிறது என்று பார்க்கும் போது பின்வரும் சில விசயங்களையும் அதன் காரணங்களையும் நாம் அலசி பார்க்க வேண்டியுள்ளது.காவி பயங்கரவாதம் என்ற சொல்லை அரசு அளவில் பெரிய அதிகாரம் உள்ளவர்களில் முதலில் பயன் படுத்தியது சிதம்பரமே.
இதன் காரணமாக ஆர். எஸ். எஸ் மற்றும் அதைச் சார்ந்தவர்களிடமிருந்து மிகப் பெரிய கண்டனம் வந்தது. பல பகுதிகளில் இருந்து ஆதரவும் வந்தது.


- சி.ஐ ஏ அமைப்பின் உளவாளி என்று சில ஊடகங்களினாலே சொல்லப்படும் சுப்ரமணிய சாமி என்பவர் உண்மையிலே யார்? அவருக்கு இந்த அளவு முக்கியத்துவம் ஏன் அளிக்கப்படுகிறது? அவர் ஏன் அடிக்கடி இஸ்ரேலுக்குப் போகிறார் இஸ்ரேலை புகழ்ந்து பேசுகிறார்? முஸ்லிகளின் மேல் அவருக்கு ஏன் இந்த அளவு வெறுப்பு?
2G இல் சிதம்பரம் குற்றவாளி என்றால் மன்மோஹன்சிங்கும் பொறுப்புதானே. அதை விட்டு விட்டு சிதம்பரம் மேல் மட்டும் ஏன் குறி வைக்கிறார்?


- பாபா ராம்தேவும் சிதம்பரத்தை குற்றவாளி ஆக்குகிறார்.
- அண்ணா ஹசாரேவும் சிதம்பரத்தை சிறையில் தள்ள துடிக்கிறார்.
- மோடியும் சிதம்பரத்தை எதிர்க்கிறார் (குஜராத் கலவரத்தில் மோடிக்கு பங்கு உள்ளது என்று சொன்ன சில ஐ, ஏ. எஸ். அதிகாரிகளை மோடி குற்றவாளி ஆக்க முனைந்தபோது அவர்கள் கேட்டுக் கொண்டால் மைய அரசு ஆதரவு தரும் என்று சிதம்பரம் சொன்னதுதான் தாமதம். அவருக்கு எதிராக துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விட்டார் மோடி).


- பி.ஜெ.பி குறி வைப்பது சோனியா மற்றும் சிதம்பரத்திற்கு எதிராகத்தான் பெரும்பாலும் உள்ளது (பல நேரங்களில் வெளிப்படையாகவும் சில நேரங்களில் மறை முகமாகவும்).


- சிதம்பரம் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின் நடந்த குண்டுவெடிப்புகளுக்கு எல்லாம் முன்பு அரசு மற்றும் அதிகாரிகள் சொன்னது போல 'இச்சம்பவத்திற்கு ஐ.எஸ்.ஐ தான் பொறுப்பு / முஸ்லிம் தீவிரவாதிகள் கைவரிசை' என்றெல்லாம் அரசு தரப்பிலிருந்து செய்திகள் பரப்பப் படவில்லை. இதன் காரணமாக முஸ்லிம்கள் சிதம்பரத்திற்கு முந்தைய நிலைமை அளவிற்கு பாதிக்கப் படவில்லை (என்பது ஏன் கருத்து).


- சிதம்பரத்தைக் குறி வைக்கும் இவை எல்லாவற்றின் முடிச்சும் ஆர்.எஸ்.எஸ்.முடிகிறது என்றே எனக்குக் படுகிறது.
காவி பயங்கரவாதம் பற்றியும் அதற்கு ஆர்.எஸ்.எஸ். இன் ஆசி/ தொடர்பு பற்றியும் அதில் சம்பந்தப்பட்டவர்கள் பற்றியும் உள்துறை அமைச்சர் என்ற வகையில் அவருக்கு நிறைய தெரிந்துள்ளதாலும் நடவடிக்கை எடுக்கப் படுவதாலும் சிதம்பரம் குறி வைக்கப்படுகிறார். இதற்கு காங்கிரசில் உள்ள சில சிதம்பர எதிர்ப்பு சக்திகளின் (ஆர். எஸ்.எஸ் ஆதரவு சக்திகள், பிராமண சக்திகள், வட இந்திய சக்திகள் என்று பல)

நன்றி ,
மு. அக்பர் அலி

0 comments:

Post a Comment