Wednesday, September 7, 2011

விக்கிலீக்ஸ்:அமெரிக்காவிற்கு உளவுப்பார்த்த கேரள முஸ்லிம் லீக் அமைச்சர் – ‘ஏகாதிபத்திய ஆக்டோபஸ்’ என SDPI! குற்றச்சாட்டு


திருவனந்தபுரம்:சோஷியல் டெமோக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் கேரள மாநிலப் பொதுச் செயலாளர் 
4626
பி.அப்துல் மஜீத் ஃபைஸி முஸ்லிம் லீக் தலைவரும், கேரள அமைச்சருமான எம்.கே.முனீர் ஓர் ஏகாதிபத்திய ஆக்டோபஸ் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
விக்கிலீக்ஸில் வெளிவந்த செய்தியைச் சுட்டிக்காட்டிய அவர், “முஸ்லிம் சமுதாயத்தையும், அவரது சொந்தக் கட்சியையும் உளவு பார்த்து அமெரிக்க துணைத் தூதரக அதிகாரிகளிடம் முனீர் தெரிவித்துள்ளார்” என்று கூறினார்.
ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், “அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய சக்திகளுடன் இவர் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததால்தான் இவருக்கு ஏற்படும் அரசியல் நெருக்கடிகளையும், கட்சியிலிருந்து வரும் நெருக்கடிகளையும் இவரால் சமாளிக்க முடிகிறது” என்று கூறினார்.
தனது தொலைக்காட்சியின் மூலம் சொந்தக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான குஞ்ஞாலிக் குட்டியின் மீது பாலியல் புகாரை எழுப்பியதில் இவர்தான் மூளையாகச் செயல்பட்டார். இப்படி கட்சிக்குக் களங்கம் விளைவித்தும் நடந்து முடிந்த தேர்தலில் அவருக்கு சீட்டு கிடைத்தது. அத்தோடு அவருக்கு அமைச்சர் பதவியும் கிடைத்துள்ளது. அமெரிக்க அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்புகளை இவர் வைத்துள்ளதுதான் அதன் ரகசியம் என்று அவர் மேலும் கூறினார்.
சென்னையில் வைத்து அமெரிக்க துணைத் தூதரக அதிகாரிகளிடம் குஞ்ஞாலிக்குட்டிக்கெதிராகவும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்ற முஸ்லிம் அமைப்புகள் குறித்தும் அவர் உளவெடுத்த தகவல்களைக் கூறியுள்ளார்.
முஸ்லிம் லீக் கட்சி இந்த மாதிரி அமெரிக்க உளவாளிகளைக் கட்சியிலிருந்து நீக்கவேண்டும். இல்லாவிட்டால் அக்கட்சி சமுதாயத்தின் பெயரால் அரசியல் செய்வதை நிறுத்தவேண்டும்” என்று அவர் கூறினார்.

0 comments:

Post a Comment