Tuesday, September 6, 2011

இந்தியாவில் 180 மில்லியன் முஸ்லிம்கள்– யு.எஸ். கணிப்பு


Majority of Indian Muslims live in a very poor conditionsடெல்லி:இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் 180 மில்லியனிற்கு மேலுள்ளதாக யு.எஸ். நம்புவதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
பத்து வருடத்திற்கு ஒரு முறை இந்திய அரசு மேற்கொள்ளும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைத்து காட்டப்படுவதாகவும், இந்தியாவில் முஸ்லிம்களின் இருப்பு பல காரணிகளை அசைக்கும் தன்மை வாய்ந்ததாக உள்ளதாவும், விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அந்த கேபிள் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2001-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள அந்த கேபிளில், முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் 138 மில்லியன் என்று குறைத்து காட்டப்பட்டுள்ளதாகும், யு.எஸ்.ஸின் கணக்குப்படி அது 180 மில்லியனை தாண்டும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்களின் அசாதாரண நிலைமைகளை விவரிக்கும் அந்த கேபிள் தகவல், டெல்லியில் உள்ள யு.எஸ். தூதரகத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, இந்திய பொருளாதாரத்தை கட்டுபடுத்தும் அசிம் பிரேம்ஜி போன்ற ஒரு சில முஸ்லிம் பணக்கார முதலைகள் இந்தியாவில் இருந்தும், பெரும்பான்மையான முஸ்லிம் சமூகம் மிகவும் பின்தங்கியே வாழ்வதாக பறைசாற்றியுள்ளது.
ஷாருக்கான் போன்ற திரையுலக ஜாம்பவான்கள் இந்தியாவில் இருந்தும், கோடிக் கணக்கான முஸ்லிம்கள் வறுமையில் தத்தளித்து வருவதாக அக்கேபிள் தகவல் தெரிவிக்கிறது. மேலும், இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை மூன்று முஸ்லிம் ஜனாதிபதிகள் பதவி வகித்திருந்தாலும், பாராளுமன்றத்தில் அவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
2006-ம் வெளியிடப்பட்ட சச்சார் கமிட்டியின் அறிக்கையையும் அந்த கேபிள் உள்ளடக்கியுள்ளது. இந்திய தலித்களின் நிலைமையை விட முஸ்லிம்கள் ஒரு மோசமான போக்கில் வாழ்ந்து கொண்டிருப்பதாக அது கூறுகிறது.
மத துவேசம், எல்லைப் பிரச்சனை, வெளிநாட்டு அழுத்தம் போன்ற பிரச்சனைகளால் முஸ்லிம்கள் துண்டாடப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஷியா,சன்னி,பறேல்வி மற்றும் வஹாபிசம் போன்ற உட்பூசல்களையும் அக்கேபிள் விட்டுவைக்கவில்லை.

0 comments:

Post a Comment