Thursday, September 29, 2011

நரேந்திர கேடியின் ஈனச்செயல்


அஹ்மதாபாத் : கடந்த செப்டம்பர் 6 முதல் குஜராத்தில் பிஜேபி நடத்திவரும் பல நாடகங்கள் ரத (ரத்த) யாத்திரையில் முடியும் என எதிர்பார்க்கப் படுகிறது. யாத்திரை அஹ்மதாபாத்தின் தெற்குப் பகுதியிலுள்ள வஸ்த்றல் என்னும் பகுதியில் நடைபெற உள்ளது., இதில் பலர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

குஜராத் ஆளுநர் கமலா பணிவால் மோடியின் மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் மோடி அரசால் கடந்த ஏழு வருடங்களாக யாரையும் தலைவராக நியமிக்காமல் கிடப்பில் போடப்பட்டு வைத்திருந்த லோகயுக்தாவிற்கு பணி ஓய்வு பெற்ற ஆர்.ஏ.மேத்தாவை தலைவராக நியமித்ததற்காக ஆளுநரை திரும்பப் பெறக் கோரியும், முறைசாரா அமைப்புகளிடம் செயல் விளைவு கட்டணம் வசூலிப்பது தொடர்பாகவும் மற்றும் குஜராத் நிர்வாகத்தில் பெண்கள் கோட்டாவை அதிகரிப்பது ஆகிய மூன்று பிரச்சனைகள் தொடர்பாக ஆளுநருடன் மோதல் ஏற்பட்டுள்ளதால் மோடி யாத்திரை மேற்கொண்டு ஆளுநருக்கு எதிராக மக்களிடம் ஆதரவு கோரப் போவதாக செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் கடந்த செப்டம்பர் 17 முதல் 19 வரை குஜராத் பல்கலைக்கழக அவையில் நடத்திய உண்ணாவிரத நாடகத்திற்குப் பிறகு மோடி பங்குபெரும் முதல் பொது நிகழ்ச்சியாகும். மேலும் இதில் மாநில பிஜேபி தலைவர் பால்து கலந்து கொள்வார் என்பதும் மோடியின் (கேடியின்) திட்டத்தை குஜராத்தின் மூளை முடுக்குகள் எல்லாம் கொண்டு செல்வது குறித்து விவாதிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

0 comments:

Post a Comment