Wednesday, September 7, 2011

விநாயகர் சிலை கரைக்க மனித ரத்தம்?


கடலூர் மாவட்டம் வேப்பூரில் ஊர் மக்கள் சார்பில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட பொது இடத்தில் பிள்ளையார் சிலை வைக்கப்பட்டு பின்னர்  அனைத்து தரப்பு மக்களும் அந்த சிலைக்கு வழிபாடு நடத்தி, ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைப்பார்கள்.
இந்த வருடமும் வழக்கம்போல் தாழ்த்தப்பட்ட இந்துக்கள் தனியாகவும்,  மற்ற இந்துக்கள் தனியாகவும் பிள்ளையார் சிலைகளை வைத்துள்ளனர். ஊர்வலம் இதர இந்துக்கள் வசிக்கும் தெரு வழியாகத்தான் செல்ல வேண்டும் என்ற நிலையில் தங்கள் பக்கம் ஊர்வலம் வரும்போது, மேளம் தாளம் இல்லாமல், எந்தவித சத்தமும் இல்லாமல் செல்ல வேண்டும் என்று தாழ்த்தப்பட்ட மக்களிடம் கூறியுள்ளனர்.
இதையடுத்து இருதரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் காவல்துறை உதவியுடன் தாழ்த்தப்பட்ட இந்துக்கள் தங்கள் பிள்ளையார் சிலையை மேள தாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைத்தனர்.  அதற்குப்பின் இவர்கள் இரு தரப்பினருக்குமிடையே அந்த தெருவிலேயே ஆபாச வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் திட்டியதாக கூறப்படுகிறது.
தாங்கள் வசிக்கும் தெரு வழியாகத்தான், இதர மக்கள் தங்கள் விவசாய வேலைகளுக்கு செல்ல வேண்டும் என்பதால், அவர்களை இந்த வழியாக வரக் கூடாது என்று தாழ்த்தப்பட்ட இந்துக்கள் கூறியுள்ளனர். இருப்பினும் அந்த வழியாகச் சென்ற சுப்பிரமணியன் என்பவரை தாழ்த்தப்பட்ட இந்துக்களில் சிலர் தாக்கியுள்ளனர்.
இந்த செய்தி இரு தரப்புக்கும் பரவியதையடுத்து,  இருதரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் இருதரப்பிலும் 10க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். அதில் இரண்டு பேர் புதுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நிலைமை மோசமாகாமல் தடுப்பதற்காக கடலூர் மாவட்ட எஸ்பி பகலவன் தலைமையில், பண்ருட்டி டிஎஸ்பி, சேத்தியாதோப்பு டிஎஸ்பி ரஜேந்திரன்,  விருத்தாசலம் டிஎஸ்பி அறிவழகன், திட்டக்குடி டிஎஸ்பி வனிதா உள்பட ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இரு தரப்பிலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment