Sunday, April 15, 2012

ஷஹ்லா கொலை:பா.ஜ.க எம்.எல்.ஏவை பாதுகாக்கும் சி.பி.ஐ!


இந்தூர்:தகவல் அறியும் உரிமை ஆர்வலர் ஷஹ்லா மஸூத் கொலை வழக்கில் பா.ஜ.க எம்.எல்.ஏ த்ரூவ் நாராயணன் சிங்கை சி.பி.ஐ பாதுகாக்க முயற்சிப்பதாக இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸபா ஃபாரூக்கி குற்றம் சாட்டியுள்ளார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரும்பொழுது செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஸபா ஃபாரூக்கி மேலும் கூறியது:

உண்மையான குற்றவாளி த்ரூவ் நாராயணன் சிங் ஆவார். அவர் குற்றவாளி இல்லையெனில் பா.ஜ.க மாநில கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமாச் செய்யுமாறு ஏன் கூறவேண்டும்? ஷாஹிதா பர்வேஸ் இவ்வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கு தொடர்பான ஒரு சி.டி சி.பி.ஐ வசம் உள்ளது. ஆனால், அதன் உள்ளடக்கம் குறித்து சி.பி.ஐ வெளியிடவில்லை என்று ஸபா ஃபாரூக்கி கூறினார்.
இதனிடையே, ஸபா ஃபாரூக்கி சிறப்பு நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்க மறுத்துவிட்டார். ஸபா, இவ்வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஷாஹிதா பர்வேஸின் தோழி ஆவார். 2-வது முறையாக ஸபா ஃபாரூக்கி வாக்குமூலம் அளிக்க மறுத்துள்ளார். வாக்குமூலம் அளிக்க விரும்பினால் 48 மணிநேரத்திற்குள் அளிக்கவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இவ்வழக்கில் ஷேக், இர்ஃபான், தாபிஷ் கான் ஆகிய வாடகை கொலையாளிகள் என கருதப்படும் நபர்களும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
முன்னர் தாபிஷ் வாக்குமூலம் அளிக்க மறுத்திருந்தார். இவர்கள் வாக்குமூலம் அளிக்க மறுத்தாலும், அவர்களுக்கு எதிராக தெளிவான ஆதாரங்கள் சி.பி.ஐக்கு கிடைத்திருப்பதாக அரசு வழக்குரைஞர் சுக்லா கூறினார்.
கடந்த 2011 ஆகஸ்ட் 11-ஆம் தேதி ஷஹ்லா மஸூத் தனது வீட்டிற்கு முன்பு வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொலைச் செய்யப்பட்டார்.
thanks to asiananban

0 comments:

Post a Comment