Thursday, April 5, 2012

நாளை லாகூர் வந்து என்னை பாருங்கள் : அமெரிக்காவை கிண்டலடிக்கும் லஷ்கர் தலைவர்


ராவல்பிண்டி : மும்பையில் நடந்த 26/11 தாக்குதலில் தொடர்புடையவர் என்று இந்தியாவில் தேடப்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பாவின் தலைவர் ஹபீஸ் சையதின் தலைக்கு 10 மில்லியன் டாலர் தொகையை அமெரிக்கா விலை வைத்தது. அதற்கு தன்னிடம் நேரிடையாக பணம் கொடுக்குமாறு அமெரிக்காவை கிண்டலடித்துள்ளார் ஹபீஸ் சையத்.
அமெரிக்கா தன் தலைக்கு விலை வைத்த அடுத்த நாளே பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்துக்கு அருகில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஹபீஸ் சையத் “ நான்
எல்லோர் முன்னிலையிலும் உள்ளேன். என்னை எல்லாரும் பார்க்கும் வகையில் காட்சியளிக்கிறேன். பேசாமல் அமெரிக்கா பணத்தை என்னிடமே நேரில் கொடுத்து விடலாம்” என்று கிண்டலாக கூறினார்.
சாதாரணமாக கண்டுபிடிக்க முடியா நபர்களை பற்றிய தகவல்கள் கொடுப்பவர்களுக்கு பரிசு தொகை அறிவிக்கப்படுவது வழக்கம். அதை கிண்டலடிக்கும் விதமாக தான் நாளை லாகூரில் இருப்பேன் என்றும் அமெரிக்கா நேரில் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறினார்.
அமெரிக்க எதிர்புணர்வு வேரூன்றியுள்ள பாகிஸ்தானில் ஹபீஸ் சையதை பாகிஸ்தான் அரசு கைது செய்யாது என்று நிபுணர்கள் கருதுகின்றனர். மேலும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயுடன் லஷ்கர் தலைவருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நேட்டோ படைகளுக்கு எதிராக தாம் நடத்தும் போராட்டங்களை ஒடுக்கவே அமெரிக்கா இத்தகைய முடிவு எடுப்பதாக ஹபீஸ் சையத் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார்.
thanks to asiananban

0 comments:

Post a Comment