Thursday, April 5, 2012

இஸ்ரேலிய முன்னாள் பிரதமர் எஹுட் ஓல்மட் சர்வதேச நீதிமன்றத்தின் நிறுத்தப்பட வேண்டிய போர்க் குற்றவாளி!..

அமெரிக்க மாணவர்கள் ‌‌ஆவேஷம்!!.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் இஸ்ரேலின் முன்னாள்பிரதமர் எஹுட் ஒல்மட் ஆற்றி ய உரைக்கு எதிர்ப்புத்தெரிவித்து பலஸ்தீனுக்கு ஆதரவான அமெரிக்கமாணவர்களும் செயற்பாட்டாளர்களும் ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர். காஸா மீது தாக்குதலை மேற்கொண்டுநூற்றுக் கணக்கான பலஸ்தீனர்களை கொலை செய்தஎஹுட் ஒல்மட் ஒரு போர்க் குற்றவாளி எனவும் அவரைநீதிமன்றத்தின் முன் நிறுத்துமாறும் அவர்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

”மத்திய கி‌ழக்கில் சமாதானத்திற்கான பாதை”எனும்தலைப்பில் சர்வதேச விவகாரங்களுக்கான சிகாகோ சபையில் எஹுட் ஒல்மட் ஆற்றிய உரையைபலஸ்தீன ஆதரவாளர்கள் நிறுத்த முயற்சி செய்ததாக இஸ்ரேலிய பத்திரிகையொன்று செய்திவெளியிட்டுள்ளது. இந் நிகழ்வில் முக்கிய பிரமுகர்களும் தொழில் வல்லுனர்களும் கலந்துகொண்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

எஹுட் ஒல்மட் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது திடீரென்று சபைக்குள் நுழைந்த செயற்பாட்டாளர் ஒருவர் ஒல்மட்டைநோக்கி, காஸா யுத்தத்தில் 1500 பலஸ்தீனர்களை கொன்றுதீர்த்த பின் உமது உணர்வு எப்படி இருந்தது? என்று கேள்வி எழுப்பியதுடன் சர்வதேச நீதிமன்றத்தின்நிறுத்தப்பட வேண்டிய ஒரு போரக் குற்றவாளி என அவரை வர்ணித்ததாக CHENNAL 10 எனும்இஸ்ரேலிய தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.thanks to qahtaninfo

0 comments:

Post a Comment