காபூல்:பதினெட்டு மணிநேரம் தொடர்ச்சியாக நடந்த மோதலின் இறுதியில் காபூல் நகரத்தை உலுக்கிய தாலிபான்களின் வசந்தகால தாக்குதல் முடிவுக்கு வந்தது. அனைத்து தாலிபான் போராளிகளும் கொல்லப்பட்டதாக ஆப்கான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதல்கள் நடைபெற்ற 3 இடங்களும் ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதாகவும், தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் போராளிகள் என்றும் உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் சித்தீக் சித்தீகி தெரிவித்துள்ளார்.
திங்கள்கிழமை காலை மோதல் முடிவுக்கு வந்தது.கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் ஆஃப்கானின் தலைநகரான காபூலின் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்பும், வெளிநாட்டு தூதரகங்களின் பல திசைகளிலும் துப்பாக்கிச்சூடும் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து அரசுப் படைகளுக்கும், தாலிபான் போராளிகளுக்கும் இடையேயான மோதல் துவங்கியது. இத்தாக்குதலில் 36 போராளிகளும், எட்டு ஆஃப்கான் ராணுவத்தினரும் கொல்லப்பட்டதாகவும், 44 ராணுவ வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் எ.எஃப்.பி செய்தி நிறுவனம் கூறுகிறது.
ஆனால், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ செய்திகள் வெளிவரவில்லை.
இத்தாக்குதல் தங்களின் வசந்தகால தாக்குதலுக்கான துவக்கம் என்று தாலிபான் ஞாயிற்றுக்கிழமை கூறியிருந்தது.
thanks to asiananban
0 comments:
Post a Comment