மஸ்ஜிதுல் அக்ஸா
உலகில் இரண்டாவதாக கட்டப்பட்ட பள்ளிவாசல் மஸ்ஜிதுல் அக்சாவாகும்.
புனித கஃபா கட்டப்பட்டு நாற்பது வருடங்களின் பின் மஸ்ஜிதுல் அக்சா கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
பல மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த கருத்துப்படி மஸ்ஜிதுல் அக்சா நபி ஆதம் (அலை) அவர்களால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
நபி இப்ராஹீம் (அலை) மற்றும் இஸ்மாயில் (அலை) அவர்களால் மஸ்ஜிதுல் அக்சா புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.
நபி தாவூத் (அலை) அவர்களால் மீண்டும் மஸ்ஜிதுல் அக்சா புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.
இறுதியாக நபி சுலைமான் (அலை) அவர்களால் மஸ்ஜிதுல் அக்சா கட்டி முடிக்கப்பட்டது.
நபி சுலைமான் (அலை) அவர்களால் கட்டப்பட்ட மஸ்ஜிதுல் அக்சா கி.மு.587 இல் பாபிலோனிய மன்னன் நேபுச்சட்னேச்சர் (Nebuchadnezzar ) ஆல் தரைமட்டமாக்கப்பட்டது.
இந்த தரைமட்டமாக்கப்பட்ட மஸ்ஜிதுல் அக்சாவையே யூதர்கள் சுலைமான் நபி அவர்களுக்காக கட்டிய ஆலயம் என வாதாடுகின்றனர்.
கி.மு.167 இல் யூதர்கள் இதனை மீண்டும் புனர்நிர்மாணம் செய்தனர் ஆனால் கி.பி.70 இல் யூதர்கள் ஜெருசல நகரத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
கி.பி.637/8 இல் உமர் இப்னு கத்தாப் (ரலி) ஜெருசல நகரை கைப்பற்றும் வரை கிட்டத்தட்ட 600 ஆண்டுகள் மஸ்ஜிதுல் அக்சா வளாகம் குப்பை போடும் இடமாக இருந்துவந்தது.
உமையாத் கலீபா அப்துல்லா மாலிக் இப்னு மர்வானால் கி.பி. 692 (ஹி.ஆ.72/73) இல் அல் சக்ராஹ் (Al-Sakhrah Mosque) கட்டப்பட்டது.
1967 இல் ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய படையால் புனித மஸ்ஜிதுல் அக்சா ஆக்கிரமிக்கப்பட்டது.
யூத ஆக்கிரமிப்பாளர்கள் மஸ்ஜிதுல் அக்சாவை அழிக்க பல முயற்சிகள் செய்தனர்.இன்னும் செய்துகொண்டும் உள்ளனர்.
900 ஆண்டுகள் பழமையான, இஸ்லாத்தின் மிக உன்னதமான வீரர்களில் ஒருவரான சலாஹுத்தீன் ஐயூபி அவர்களால் கட்டப்பட்ட மிம்பர் 1967 இல் அழிக்கப்பட்டது.
சியோனிச யூத சக்திகள் மஸ்ஜிதுல் அக்சாவை அழித்துவிட்டு அவ்விடத்தில் யூத ஆலயம் ஒன்றை நிறுவ முயற்சி செய்துவருகின்றனர்.
எங்கள் ஒவ்வொரு தொழுகையிலும் மஸ்ஜிதுல் அக்சாவுக்கும் பலஸ்தீன மக்களுக்கும் துவா செய்வோம். ஆமீன்.

thank to qahtaninfo
0 comments:
Post a Comment