திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த 29-ந்தேதி காலை மர்ம கும்பலால் கடத்தி படுகொலை செய்யப்பட்டார். ராமஜெயத்தின் உடலை கல்லணை அருகேயுள்ள திருவளர்ச்சோலை பகுதியில் வீசி விட்டு தப்பி சென்று விட்டனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் உத்தரவின் பேரில் 7 தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட ராமஜெயத்தின் பிரேத பரிசோதனை அறிக்கை, இன்று திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பிரேத பரிசோதனை அறிக்கையை திருச்சி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சமர்ப்பித்தார்.
அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததாவது;
ராமஜெயம் கடத்தப்பட்ட ஒரு மணிநேரத்திற்குள் கொல்லப்பட்டிருக்கிறார். அவருக்கு சயனைடு விஷம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் இவரது உயிர் பிரிந்து இருக்கிறது. மேலும் அவரது கழுத்தை நெரித்ததற்கான அறிகுறிகளும் அவரது பின்மண்டையில் பலமாக தாக்கியதற்கான அறிகுறிகளும் இருந்தன.
கொலை வழக்கை விசாரிப்பதற்கு பிரேத பரிசோதனை அறிக்கை முக்கிய தடயமாக அமையும் என்பதால், போலீசார் தமது விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
thanks to asiananban
0 comments:
Post a Comment