Saturday, April 7, 2012

தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் பலஸ்தீன் கைதிகள்


ரமல்லா: எத்தகைய நியாயமான காரணமும் இன்றி இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையால் கைதுசெய்யப்பட்டு, இதுவரை உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படாமல் இஸ்ரேலியச் சிறையில் பல்வேறு சித்திரவதைகளை அனுபவிக்கும் பலஸ்தீன் கைதிகளில் 12 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
கடந்த வியாழக்கிழமை (05.04.2012) பலஸ்தீன் கைதிகள் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கச் சிறை நிர்வாகத்தின் காட்டுமிராண்டித்தனத்துக்கு எதிராய் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பலஸ்தீன் கைதிகள் பற்றிய
விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
"ஜெனினைச் சேர்ந்த பிலால் தியாப், அல் ஹலீலைச் சேர்ந்த தாஹிர் ஆகியோர் 38 ஆவது நாளாகவும், நப்லஸைச் சேர்ந்த உமர் அபூ வாதிர் 31 நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் அவர்களின் உடல்நலம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. மேற்படி கைதிகள் உயிருக்குப் போராடும் நிலையில் இருப்பதால்,  உடனடியாக ரமல்லா கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என மேற்படி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
thanks to asiananban

0 comments:

Post a Comment