அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 6-ந்தேதி நடக்கிறது. அதில் ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளராக அதிபர் ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சி வேட்பாளராக குடியரசு கட்சியைச் சேர்ந்த மிட்ரோம்னி களம் இறங்குகிறார். இவர் அதிபர் ஒபாமாவுக்கு கடும் போட்டியாக திகழ்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே பிரசாரம் கடுமையாக இருக்கும் என தெரிகிறது. அதில் சர்வதேச பயங்கரவாதி பின்லேடன் கொல்லப்பட்ட விவகாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் பின்லேடன் அமெரிக்காவின் முக்கிய எதிரியாக இருந்தார். மேலும் அந்த நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் விளங்கினார். அவர் எங்கு ஒளிந்திருக்கிறார் என்பது புதியாத புதிராக இருந்தது.
அந்த நிலையில் ஒபாமா அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு பின்லேடனை கண்டுபிடித்து சுட்டுக் கொன்று சாதனை படைத்தது. இதன் மூலம் அமெரிக்காவின் பாதுகாப்பு தன்மை உறுதிபடுத்தப்பட்டுள்ளது. எனவே பின்லேடன் கொலை ஒபாமா அரசின் முக்கிய சாதனைகளில் வரிசையில் ஒன்றாக கருதப்பட்டு பிரசாரத்துக்கு பயன்படுத்தப்பட உள்ளது.
இதை துணை அதிபர் ஜோபைடன் ஒபாமா அரசின் வெளிநாட்டு கொள்கையை வெளியிடும் போது சூசகமாக தெரிவித்தார்.
thanks to asiananban
0 comments:
Post a Comment