Monday, April 9, 2012

அமெரிக்கா திடீர் பல்டி: ஈரான் அணுசக்தித் திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கத் தயார் !


மக்கள் நலத்தினை  முன்னிறுத்தும் அணுசக்தித் திட்டங்களுக்காக ஈரான் செயற்பட்டால் அதை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். ஈரான் மீதான அமெரிக்க அணுகுமுறை மாற்றம் அடைந்துவருவதை இச்செய்தி தெரிவிக்கிறது. அணுஆயுதங்களை ஈரான்  தயாரிப்பதை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா அவையில் அமெரிக்கா, இஸ்ரேல் உள்பட பல நாடுகள் முறையிட்டு வந்தன. இதையே காரணம்காட்டி ஈரான் மீது இராணுவ தாக்குதல் நடத்தப்படும் என்று மிரட்டி அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளையும் விதித்தன. ஆனால், ஈரான் சுப்ரீம் தலைவர் அலி கமேனி, அதிபர் அகமதி நிஜாத் ஆகியோர், ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் பயங்கர பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பதிலடி கொடுத்தனர்.

இதற்கிடையில், ஈரானில் செயல்படுத்தப்படும் அணுசக்தித் திட்டங்களை பார்வையிட ஐ.நா. குழுவை அனுமதிக்க வேண்டும் என்று பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.இவ்விரு தரப்புக்கும் துருக்கி உள்பட சில நாடுகள் சமரச முயற்சியிலும் ஈடுபட்டுள்ளன.  ஈரானிலும், அமெரிக்கா, சவூதி உள்ளிட்ட நாடுகளுடன் இணக்கமாகச் செல்ல வேண்டும் என்று முன்னாள் அதிபர் ரஃப்சஞ்சானிகருத்துத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், எதிர்பாரா மாற்றமாக "அணு ஆயுதங்கள் தயாரிக்கவில்லை என்பதைஈரான் நிரூபித்தால், மக்கள் நலனுக்கான அணுசக்தித் திட்டங்களை ஏற்றுக் கொள்வோம்" என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். இந்த தகவலைதுருக்கி பிரதமர் தய்யிப் எர்தோகனிடம் கூறி, அதை ஈரான் தலைவர்களிடம் தெரிவிக்கும்படி ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி, ஒபாமாவின் தகவலைஅலி கமேனியிடம் தய்யிப் கடந்த வாரம் தெரிவித்து விட்டார் என்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன

thanks to asiananban

0 comments:

Post a Comment