புதுடெல்லி:ஏற்றுமதி வர்த்தகரின் எருமை மாமிசம் அடங்கிய கண்டெய்னரை அநியாயமாக பறிமுதல் செய்த வழக்கில் குஜராத் அரசிற்கும், விலங்குகள் நல ஆர்வலருக்கும் உச்சநீதிமன்றம் ரூ.25 லட்சம் வீதம்(மொத்தம் 50 லட்சம்) அபராதம் விதித்துள்ளது.
குஜராத்தில் ஆட்சி புரியும் மோடி தலைமையிலான பாசிச பா.ஜ.க அரசு பசு வதை தடைச்சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல தடைச் செய்யப்பட்ட பசு மாமிசத்தை கடத்துகிறார்கள் என குற்றம் சாட்டி எருமை மாமிசம் அடங்கிய கண்டெய்னரை பறிமுதல் செய்தனர் மோடி அரசின் அதிகாரிகள். விலங்குகள் நல ஆர்வலரான ராஜேஷ் ஹஸ்திமால்ஷாவும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளார்.
இந்நிலையில் எருமை மாமிசத்தை கொண்டு சென்ற ராயல் எக்ஸ்போர்ட்ஸ் எருமை மாமிசத்தை பறிமுதல் செய்ததன் மூலம் தங்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டி உச்சநீதிமன்றத்தை அணுகியது.
எருமை மாமிச இறைச்சியின் மாதிரியை பரிசோதித்த டெல்லி ஃபாரன்சிக் சயன்ஸ் சோதனைக் கூடமும் எருமை இறைச்சிதான் என்பதை உறுதிச்செய்தது. இந்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு நீதிபதிகளான அல்டமாஸ் கபீர், எஸ்.எஸ்.நிஜார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் குஜராத் மோடி அரசும், விலங்குகள் நல ஆர்வலர் ராஜேஷும் ரூ.25 லட்சம் வீதம் அபராதம் செலுத்தவேண்டும் என்று உத்தரவிட்டது.
thanks to thoothuonline
0 comments:
Post a Comment