ஜப்பானில் கடந்த ஆண்டு பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து சுனாமி தாக்குதலில் பல நகரங்கள் சேதம் அடைந்தன. அப்போது 9.0 புள்ளி ரிக்டர் அளவில் பூகம்பம் பதிவானது. இதில் 20 ஆயிரம் பேர் பலியாயினர். புகுஷிமா நகரில் இருந்த அணு உலைகள் வெடித்து சிதறின. பயிர்கள், மனிதர்கள் கதிர்வீச்சில் பாதிக்கப்பட்டனர். ஓராண்டு முடிந்த நிலையில், பூகம்பம், சுனாமி பாதிப்பு குறித்து விரிவான ஆய்வு நடத்த நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு கடந்த ஓராண்டாக பல விஷயங்களை
அலசி ஆராய்ச்சி அறிக்கை அளித்துள்ளது.அதில், ஜப்பானில் மீண்டும் 9.0 புள்ளி ரிக்டர் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டால் 112 அடி உயரத்துக்கு (34 மீட்டர்) சுனாமி அலைகள் தாக்கும் அபாயம் உள்ளது. அப்படி நடந்தால் டோக்கியோ முதல் தென்மேற்கு பகுதியில் உள்ள குயுஷு தீவு வரை பாதிப்பு இருக்கும். பல நகரங்கள் மூழ்கிவிடும் என்று எச்சரித்துள்ளது.
கடந்த 2003ம் ஆண்டு அமைக்கப்பட்ட நிபுணர் குழு, ÔÔசுனாமி அலைகள் 20 மீட்டர் உயரத்துக்கு தாக்கினாலும் எந்த நகரமும் மிக மோசமாக பாதிக்கப்படாதுÕÕ என்று கூறியிருந்தது. ஆனால், இப்போதைய நிபுணர் குழு, 9.0 புள்ளி ரிக்டர் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டால் பெரும் பாதிப்பு ஏற்படும்ÕÕ என்று எச்சரித்துள்ளது. இதையடுத்து பேரிடர் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஜப்பான் அரசு ஆராய்ந்து வருகிறது
thanks to asiananban
0 comments:
Post a Comment