Sunday, April 1, 2012

இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளராக கைரத் அல்-ஷாதிர் தெரிவு


எகிப்திய ஜனாதிபதித் தேர்தலில் இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளராக பொறியியலாளரும், அதன் துணைத் தலைவருமான கைரத் அல்-ஷாதிர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் பொது வழிகாட்டியான முஹம்மத் பதி நேற்று சனிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டின்போது தெரிவித்தார்.

மேலும், கைரத் அல்-ஷாதிரை தங்களது வேட்பாளராக ஏற்றுக் கொள்வதாக, இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் அரசியல் கட்சியான நீதிக்கும் சுதந்திரத்திற்குமான கட்சி அறிவித்துள்ளது.

இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கான இறுதிக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 56 வீதமானவர்கள் கைரத் அல்-ஷாதிரையே ஆதரித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
THANKS TO QAHTANINFO

0 comments:

Post a Comment