Sunday, April 1, 2012

சீனாவில் வதந்தியை பரப்பிய இணையத்தளங்கள் மீது கடும் நடவடிக்கை: 1000 பேர் கைது!


சீனாவில் இராணுவ புரட்சி ஏற்பட்டதாக வதந்தி பரப்பிய இணையத்தளங்கள் மற்றும் அதற்கு காரணமாக நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சீன அரசு தெரிவித்துள்ளது

கம்யூனிச ஆட்சி நடைபெற்று வரும் சீனாவில் பிரபலமான தலைவராக விளங்கிய போ ரூலாய் என்பவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
இதனால் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், இராணுவம் ஆட்சியைக் கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாகவும் இணையத்தளங்களில் செய்தி வெளியானது.
இந்நிலையில் இராணுவ வாகனங்கள் பெய்ஜிங் நகருக்குள் நுழைய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இதற்கு சீன அரசு மறுப்பு தெரிவித்துள்ளதுடன், கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வதந்தியை பரப்பியதாக சுமார் 1000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற செய்திகளை உலவ விடும் இணையத்தளங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும், இத்தகைய வதந்தியை பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.THANKS TO QAHTANINFO

0 comments:

Post a Comment