Tuesday, November 29, 2011

ஜெர்மனியிலுள்ள நோக்கியா நிறுவனத்தில் 17000 ஊழியர்கள் திடீர் டிஸ்மிஸ்.


செல்போன் தயாரிப்பில் உலகில் முன்னணி நிறுவனமாக நோக்கியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஐரோப்பிய நாடுகளின் சீமன்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து செல்போனை தயாரித்து வருகிறது. கடும் போட்டி காரணமாக சமீப காலமாக இந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.
எரிக்சன் மற்றும் சீன நிறுவனம் ஹாவி ஆகியவை கடும் போட்டியாக உள்ளன. அவற்றை சமாளிக்க முடியாமல் நோக்கியா நிறுவனம் தவிக்கிறது. எனவே நஷ்டத்தை சரிக்கட்ட 17 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வது என்று நோக்கியா நிறுவனம் முடிவு செய்தது. இந்த நிறுவனத்தில் மட்டும் 74 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில் 23 சதவீத ஊழியர்கள் நீக்கப்படுகின்றனர்.
இதன் மூலம் நிறுவனத்துக்கு ரூ. 7,300கோடி மிச்சமாகும். எனவே நிறுவனத்தை லாபத்தில் செயல்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கின்றனர். மேலும் நோக்கியா சீமன்ஸ் நிறுவனம் ஆகியவை தனித்தனியே பிரிந்து விடுவது என்றும் திட்டமிட்டுள்ளனர்.
sourses-thedipaar.com

0 comments:

Post a Comment