மழை, வெள்ளத்தால் பலியான 6 பேரின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம்: ஜெயலலிதா சென்னை, நவ.9: மழை, வெள்ளப் பாதிப்பினால் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பெய்துவரும் வடகிழக்குப் பருவமழை காரணமாக நவம்பர் 8-ம் தேதி, கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் தொளார் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜின் மகள் சத்தியதேவி, திருப்பூர் மாவட்டம் கருவம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமியின் மகன் சதாசிவம் (எ) மணி, சங்கிலிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசனின் மகன் சண்முகம், ஈரோடு மாவட்டம் துய்யம்பூந்தரை கிராமத்தைச் சேர்ந்த இருளப்ப நாடாரின் மகன் அங்கப்ப நாடார் ஆகியோர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த பண்டார நாடாரின் மனைவி ராஜேஸ்வரி மின்சாரம் தாக்கியும், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் வடமலையனூர் கிராமத்தைச் சேர்ந்த சன்னியாசியின் மனைவி சின்னபிள்ளை மழையினால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததாலும் உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன். இந்த 6 நபர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தத் துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ. 2 லட்சம் உதவித்தொகையை உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன். | பார பட்சம் : பலியானவர்கள் முஸ்லிம்களாக இருந்தால் ரூ 1 லட்சம் தான் ! சென்னை, நவ.9: புழல் ஏரியில் மூழ்கி இறந்த 3 நபர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 1 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: திருவள்ளூர் மாவட்டம் புழல் ஏரியில் நவம்பர் 8-ம் தேதி மூழ்கி இறந்த சென்னை கிழக்கு அண்ணா நகரைச் சேர்ந்த சத்தாரின் மகள் சர்மிளா, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த காதர் பாட்சாவின் மகன் முகமது ரிஸ்வான், சூரப்பட்டு சண்முகபுரத்தைச் சேர்ந்த முகமது நசீரின் மகன் முகமது ஆஷிக் ஆகிய மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்று செய்து அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன். அகால மரணமடைந்த அவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 1 லட்சம் உதவித்தொகை வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். குறிப்பு :ஒரே கால கட்டம் - ஒரே நாளில் நடந்த உயிரழப்புகள், ஆனால் நிவாரணமோ அனைவருக்கும் தலா 2 லட்சம் வழங்கிய முதல்வர், முஸ்லிம் குடும்பங்களுக்கு மட்டும் 1 லட்சம் வழங்கியிருப்பது, அந்த குடும்பங்களை மேலும் வேதனையடைய செய்துள்ளது. | |
0 comments:
Post a Comment