பலஸ்தீனின் காசா பாகுதியில் ஹமாஸ் இலக்கு மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் பொலிஸார் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதோடு மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். வடக்கு காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பு கடற்படை தளமாக பயன்படுத்திய கட்டடத்தின் மீதே இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்கு நேற்று அதிகாலை நடத்தப்பட்டுள்ளது. தீவிரவாத செயலில் ஈடுபடும் இலக்கு மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக தெற்கு இஸ்ரேலின் ஷார் ஹெனதேவ் பகுதிக்கு காசாவில் இருந்து எறிகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் எந்த உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை. இந்த தாக்குதல் இடம்பெற்று ஒருசில மணிநேரத்திலேயே இஸ்ரேல் இந்த வான் தாக்குதலை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
sources-yarlmuslim

0 comments:
Post a Comment