எகிப்தில் அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அதை தொடர்ந்து 17 நாட்களுக்கு பிறகு அவர் பதவி விலகினார். எனவே ஆட்சி அதிகாரம் ராணுவம் வசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த மாதம் இறுதியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரம் குறைக்க வழி செய்யும் வகையில் அரசியல் சட்டம் மறுசீரமைப்பு செய்யப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ராணுவ ஆட்சி பதவி விலக கோரியும் பொது மக்கள் மீண்டும் போராட தொடங்கினார்கள். இது கடந்த வெள்ளிக்கிழமை தீவிரம் அடைந்தது. கெய்ரோ, அலெக்சாண்டிரியா ஆகிய நகரங்களில் சுமார் 1லட்சத் துக்கும் மேல் கூடிய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கெய்ரோவில் உள்ள தக்ரீர் மைதானத்தில் கூடாரங்கள் அமைத்து தங்கி தொடர்ந்து போராடினர். இதற்கு ராணுவ ஆட்சியாளர் கள் அனுமதிக்க வில்லை. கூடாரத்தை அகற்றி விட்டு தக்ரீர் மைதானத்தை விட்டு வெளியேற வேண்டும் என பிரதமர் எஸ்சாம் ஷராப் உத்தரவிட்டார். ஆனால், இதை போராட்டக்காரர்கள் கேட்கவில்லை.
இதையடுத்து நேற்று இரவு தக்ரீர் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த கூடா ரங்களை போலீசார் அப்புறப்படுத்தினார்கள். இதனால் அங்குமீண்டும் கலவரம் வெடித்தது. கூடாரங்களை அகற்றிய போலீசாரை பொதுமக்கள் தாக்கினார்கள். போலீஸ் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இத னால் தக்ரீர் மைதானத்தை கரும்புகை சூழ்ந்துள்ளது. கலவரத்தை அடக்க போலீசார் கண்ணீர்புகை குண்டுகளையும் வீசினார்.
ரப்பர் குண்டுகளால் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அதில் சுமார் 700 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி 2 பேர் பலியானார்கள். மேலும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கெய்ரோவை தொடர்ந்து தற்போது அலெக்சாண்டி ரியா, சூயஷ் நகரங்களுக்கும் கலவரம் பரவியுள்ளது.
source-yarlmuslim
0 comments:
Post a Comment